Sunday, April 20, 2014

தெனாலிராமன்

தெனாலிராமன் 

நனது சொந்த காரணங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கு மிகவும் பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்....
இன்னும் வடிவேலுவை மக்கள் மறக்கவில்லை என்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டமே சான்று...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு ராஜா வேடத்திற்கான கம்பீரம் வடிவேலுவுக்குதான் மிகவும் பொருத்தமாக உள்ளது... ஒவ்வொரு காட்சியிலும் வடிவேலுவின் அனுபவம் தெரிகிறது .... 
குறிப்பாக டயலாக் டெலிவெரியில் மனிதர் பிண்ணுகிறார்....
நடிப்பில் புகுந்து விளையாடியுள்ளார்...

இரண்டு வேடங்களிலும் அசத்தலான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் வசப்படுத்துகிறார்....

இந்த திரைப்படத்தில் குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகளை பாராட்டியே ஆக வேண்டும் அழகாக செய்திருக்கிறார்கள் .... குறிப்பாக சீன தேசத்தை காண்பித்தவிதம் உண்மையில் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தில் சுட்டிருப்பார்களோ என்று தோணும் அளவிற்கு சிறப்பாக இருந்து ...

இசை எத்தனை பாடல்கள் என்ன பாடுகிறார்கள் (ஸ்ரேயா கோசலின் ஆணழகு பாடலைத் தவிர) என்று புரியாத அளவிற்கு பாடல்கள் உள்ளது. ஆனால் பிண்ணனி இசையை அசத்தலாக செய்திருக்கிறார்கள்... இமான்

ஹீரோயின் ... இந்த புள்ளைய ஏற்கனவே எந்த படத்திலயோ பார்த்த ஞாபகம்.. இந்த படத்தில் அழகாக இருக்கிறார்... ஆனால் தனக்கு எதற்காக. இந்த படத்தில் வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து நடித்துக்காட்டியிருக்கிறார்...

ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது குறிப்பாக லாங்சாட்ஸ் எல்லாம் அழகாக அமைத்திருக்கிறார்கள்...

அரண்மனை செட்டிங் பெரும்பாலான திரைப்படங்களில் நாம் பார்த்ததை போன்றே இருக்கிறது... கலை இயக்குனர் இந்த படத்திற்கு இது போதும்என்று நினைத்துவிட்டார் போலும்...

யுவராஜ் தயாளன் படத்தின் இயக்குநர் தெனாலிராமன் கதையுடன் நமது நாட்டின் தற்போதைய நிலையையும் இணைத்துக்கூற நினைத்திருக்கிறார்...

தெனாலிராமனின் கதைகளில் நாம் அனைவருக்கும் தெரிந்த கதைகளையே சொல்லியிருக்கிறார் ஆனாலும் அதை வடிவேலு தன் அசாத்திய நடிப்புத்திறமையால் அனைவரையும் விழுந்த விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார்...

குறிப்பாக இயக்குனரின் நம் தேசத்தின் நிலையை நாசுக்காக நருக்கென்று பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார குறிப்பாக ”சாகும் முன் உண்ணாவிரம்”...

தெனாலிராமனின் காமெடி கலக்கலுடன் சில நாட்டுநடப்புகளை இணைக்கும் பொழுது இயக்குனர் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.. இடைவேளைக்கு பிறகு படம் காமெடி டிராக்கிலிருந்து மாறுகிறது வாடிவேலுவின் காமெடியை ரசிக்க வந்த ரசிகர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது...

அந்த குறையை கதாபாத்திரங்கள் நிவர்த்தி செய்கிறார்கள்... படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நமக்கு வடிவேலுவைப்போல் ரசிகர்களுக்கு தெரிந்த முகம் அதுவே படத்தில் பெரிய பலம்...

ஒரு கட்டத்தில் படம் சலிப்பைத்தட்டி ரசிகர்கள் தூங்கும் நிலைக்கு தள்ளப்படும்பொழுது மன்சூர் அலிகானின் வரவு அனைவரையும் சரியான தேர்வு...

ரசிகர்கள் ஒரு பெரிய கிளைமாக்ஸை எதிர்பார்த்து காத்திருக்கையில் திடீரென்று படம் முடிந்த விடுகிறது... இதை எத்தனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை...

திரைக்கதையில் இயக்குநருக்கு தேர்ச்சி தேவை...

23ம் புலிகேசி போல் எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றமே...

ஆனாலும் வடிவேலு & கோவின் நடிப்பிற்காக பார்க்கலாம்...

தெனாலிராமன் ... சிங்கம் களம் இறங்கிருச்சு.....

3.2/5

No comments:

Post a Comment