Tuesday, September 30, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்
-----------------------------------------------
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அட இவ்வளவு எளிமையா ரசிக்கும் படி ஒரு படம் எடுக்கமுடியுமா என ரசிக்க வைத்த இயக்குனர் இரஞ்சித்தின் அடுத்த படம்.

கதை- பல திரைப்படங்களில் பார்த்த கதை. நண்பன், அரசியல்வாதிகள் , ஏரியா, காதலி, சண்டை கிளைமாக்ஸ் அவ்வளவுதான்...

ஆனா அதை அப்படியே நேட்டிவிட்டியோடு அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். பல திரைப்படங்களில் வட சென்னையை ரௌடிகளை காட்டும் போது மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இதில் வடசென்னை கவுசின் போர்ட்லிலேயே படம் முழுவதையும் முடித்துவிடுகிறார்கள். நேட்டிவிட்டியே படத்தை பார்க்க தூண்டுகிறது.

கல்லையே நடிக்க வைத்தார் பாரதிராஜா... இரஞ்சித் ஒரு சுவரையே மெயின் கதாப்பாத்திரமாக நடிக்கவைத்திருக்கிறார்... இந்த சுவர்தான் கதையே

கார்த்தி - பல பல்புகளை வாங்கியபின் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். மற்ற படங்களை விட இதில் பருத்திவீரன் அளவிற்கு சிரத்தை எடுத்திருக்கிறார். ஆனால் சுட்டு போட்டாலும் இவருக்கு இந்த மெட்ராஸ் பாஸை வரமாட்டேங்குது... அதுக்கு சும்மாவே தமிழ் பேசியிருக்கலாம்... அந்த வெகுளித்தனமாக பல்லைக்காட்டுவதில் இவர் அண்ணை பார்க்க கடுப்பானாலும் இவருக்கு செட்டாகுது...
கமலுக்க பிறகு மெட்ராஸ் தமிழ் கரெக்டா செட்டாகி இருப்பது விஜய் சேதுபதிக்குதான் பல இடங்களில் ச்சே! விஜய் சேதுபதி பண்ணிருந்தா இந்த சீன் சூப்பாரா இருக்கும்னு என்று தோன்றுகிறது. படம் முழுவதும் இவர்தான் கதையை கொண்டு செல்கிறார் ஆனா அமர்ந்திருப்பவர்கள் இவருக்காக அமர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை...

அப்ப யாருக்கு படம்?

கலையரசன்- அன்பு என்ற கேரக்டரில் அவ்வளவு ஒரு இயல்பான நடிப்பு (இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த)... தனது ஆசாத்திய நடிப்பால் கார்த்தியை ஓரங்கட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்... வடசென்னை வாழ் இளைஞனை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார்... மௌனராகம் கார்த்திக், நீ வருவாய் என அஜித் போல் நல்ல கதாப்பாத்திரம் ...  கார்த்தியையும் பாராட்டியே ஆகவேண்டும் தன்னை விட ஆதிக ஸ்கோப் இந்த கேரக்கருக்குதான் என்று தெரிந்தும் நடிக்க சம்மதிதிருக்கிறார்...

அந்த கதாப்பாத்திரம் இல்லாமலே பார்வையாளர்கள் பிற்பாதி முழுவதும் அந்த காதாபாத்திரத்தை நினைவு கூறுவதிலும் சரி....படம் முடிந்து வெளியே வரும் போதும் அனைவரும் அன்பு கேரக்டர் பற்றிதான் பேசும் அளவிற்கு இயல்பான நடிப்பு ...

ஹீரோயின் கேத்தரின் தெரசா- எல்லாரும் அட இதுவா ஹீரொயின் என்னடா டம்மி ....... அப்படினு ஆரம்பத்தில் யோசித்தாலும் வடசென்னை வாழ் ஹீரோயின் என்பதற்கு சரியான தேர்வு நன்றாக நடித்திருக்கிறார்.... கார்த்தி மெட்ராஸ் தமிழும் நல்ல தமிழும் கலந்து டயலாக் பேசும்போது இந்த புள்ள கரெக்டா மெட்ராஸ் தமிழ் (டப்பிங் ஆர்டிஸ்டுக்கே இந்த பாராட்டு) பேசுறது ஏதோ கார்த்திய கலாய்கிறமாதிரி இருக்கு...

ஜானி- கார்த்தியை விட அன்பிற்கு அடுத்து கவனிக்கப்பட வைத்த கேரக்டர் ஜானி இவர் மாதிரி எல்லா ஊர்லயும் எல்லா ஏரியலவும் பெரும்பாலும் ஒருத்தர் இருப்பார் வெகு இயல்பாக செய்திருக்கிறார்...

கார்த்திக்கு அம்மா, அப்பா, பாட்டி, அன்புக்கு மனைவியா வர்ர புல்ல வில்லன் எல்லா கேரக்டரும் கரெக்கடா பொருந்தியிருக்காங்க கார்த்தியை தவிர கார்த்தியை பார்த்து பார்த்து அப்படியே பழகிடுறோம் அவ்வளவுதான்...

இசை இந்த படத்துக்கு இவ்வளவு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது.. ஆனால் இது போன்ற கதைகளுக்கு பின்னணி இசைதான் முக்கியம் இது போன்ற கதைகளுக்கு வில்லன் பைட் அப்படியே தெரிக்க விட் வேண்டாமா... அந்த சுவர காட்டும் போதே ஒரு பயம் வரும் அளவிற்கு இன்னும் முயன்றிருக்கலாம்.... பரவாயில்லை ....

நன்றிப்பா பாட்டுனதும் பாரின் போகலை...

கேமிராமேன் முரளி- வட சென்னை ஹவுசிங்க யூனிட் எல்லாம் அழகாக காட்டியிருக்கிறார்... ஒரு சீன்ல கார்த்திக் பின்னாடி அப்படியே நிழல் உயரமாகும் செம மாஸ் (ஆனா என்ன நிழல் இருக்க பக்கம் தான் லைட் இருக்கும் கேமரா பக்கம் இருட்டாதான் இருக்கும்)

கிளைமாக்ஸ் எப்படியாவது முடிக்கனும் வேற வழியில்ல சண்டக்கோழி, நான் மகான் அல்ல படங்கள் கைகொடுக்க ஒரு வழியாக வில்லனை கொன்று படத்தை முடித்துவிடுகிறார்... இது மட்டும் கொஞ்சம் சொதப்பல் ... வேற வழியும் இல்ல...

மெட்ராஸ்- வடசென்னை மாஸ்
 இயக்குனர் அட்டகத்தி இரஞ்சித்தின் அடுத்த வெற்றிக்கத்தி

3.8/5