Saturday, October 25, 2014

கத்தி




கத்தி

எதிர்பார்ப்புடனும் எதிர்ப்புடனும் விஜய் முருகதாஸ் கூட்டணில் வெளிவந்திருக்கும் படம். படம் எப்படி வெளிய வந்தது என்பதை எந்த படத்திலும் காட்டாத ஒரு டிவி சேனலை காட்டி புரியவைத்திருக்கிறார்கள்

விஜய்- 
முதன் முதலாக சரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய், இதுவரை விஜயை இயக்கிய இயக்குனர்கள் விஜயை அழகாய் பார்த்தார்கள் முருகதாஸ் மட்டுமே அவரை சரியான கதைக்களத்தில் வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

மாஸ், ஹீரோயிசம் என்பதை விஜய்க்கு சரியாக புரியவைத்திருக்கிறார் இயக்குனர். சொல்லப்போனால் விஜய்க்கு சரியான பாதையை துப்பாக்கி முதல் அமைத்துக்கொடுத்துவிட்டார் முருகதாஸ் என்றே சொல்ல வேண்டும்.

விஜய்க்கு சரியான கதை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன் முதலாக கை தட்டி பாராட்டும் அளவிற்கு நடித்திருக்கிறார் விஜய். கண்டிப்பா ஒரு விருது கொடுத்து பாராட்ட வேண்டும்.

சமந்தா-
படத்தின் ஹீரோயின் அவ்வளவுதான் சொல்றதுக்கு வேற எதும் இல்லை. அஞ்சான் அளவிற்கு நடத்துக்காட்டலைனுதான் சொல்லனும்….

கதை மற்றும் முருகதாஸ்-
லாஜிக் ஓட்டைகள் பல இருந்தாலும் அப்படிலாம் இல்லைனா டாக்குமெண்ட்ரி படமாதிரி இருக்குனு இந்த வாய்தான் சொல்லும். சமூகத்தில் ஒரு முக்கியமான பிரச்சனை யாரும் கண்டுகொள்ளாத பிரச்சனை, தூள், தண்ணீர் தண்ணீர் போன்ற படங்களில் ஏற்கனவே கையாண்ட கதைக்களம்தான் என்றாலும் ஒரு சமூகப்பிரச்சனையை ரசிக்கும் அளவு பல திருப்பங்களுடன் முருகதாஸ் தனக்கான ஸ்டைலில் சொல்லி பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

முருகதாஸின் ஸ்டைலில் முக்கியமானது கடைசிகட்ட காட்சிகளில் அனைவரையும் சீட்டின் நுனியில் உடகார வைத்து விடுவார். இதில் அனிரூத்தின் சொதப்பல் பின்னணி இசையையும் மீறி அந்த ஏரி குழாய் போராட்டத்தில் ஹைய் டெம்பர்ல போய்டே இருக்கிறார் இயக்குனர்… அப்புறம் வயதானவங்களை எல்லாம் பயன்படுத்தியது இயக்குனரின் சமுதாய பார்வைக்கு ஒரு சான்று.. ஒரு சில சீன்ல நிமிர்ந்து நில் நினைவுக்கு வந்தது….

வசனம்-
கத்திப்படத்தின் கத்தி வசனம்தான் ஷார்ப்பான வசனங்கள் அனைவரையும் சிந்திக்க தூண்டும் வசனங்கள் படத்தின் அடுத்த ஹீரோ. விஜய் பிரஸ்மீட்ல பேசும் போது ஒவ்வொரு வசனமும் செம மாஸ்… கை தட்டல் பரக்கும் காட்சிகள் அது. அதில் எல்லா பிரச்சனையையும் பேசும் போது மீத்தேன் பற்றி சொல்லுவாய் வாய்ப்பிருந்தால் நண்பர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மீடியாக்களை கேட்கும் கேள்விகள் நருக் சுருக்… அந்த சீன்ல வருவது நம் ஊர் கரார்னு நினைக்கிறேன். Aranthai KRajagopal

வில்லன் நீல் நிதின் முகேஷ்-
நிறையபேருக்கு இவர் யாருனே தெரியல இவர் வெளிநாட்டுகாரர்லாம் இல்ல இந்தியாதான் பாலிவுட்ல ஒரு குறிப்பிடத்தக்க ஹீரோ குழந்தை நட்சத்திரம் முதல் நடித்துக்கொண்டிருப்பவர். விக்ரமோட டேவிட் படத்திலும் நடித்திருக்கிறார். வில்லத்தன எக்ஸ்விரசன்லாம் சூப்பர் ஆனா இவருக்கு வாய்ப்பில்லை… வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வில்லக்கதாபாத்திரம் போலவே டம்மியாக்கப்பட்ட கதாபாத்திரம்

கேமராமேன்- வில்லியம்ஸ்
இவரு ராஜா ராணி கேமரா மேன்தானானு சந்தேகமாக இருக்கிறது. சொதப்பல்களில் கேமிராவும் ஒன்ற பாடல்களில் சரியாக கேமராவை கையாண்டவர் கதைக்களத்தில் தவற விட்டிருக்கிறார். ஒரு கிராமத்தையம் அவர்களின் வறட்சியையும் கேமராவில் சரியாக கையாளவில்லை.

மேலும் விஜய் தனியா எந்த ஹீரோயிசமும் செய்ய வாய்ப்பில்லை. அவரோட எக்ஸ்பிரசனதான் மாஸா காட்டியாகனும் சொல்லப்போனால் விஜயை அழகாக காட்டியவர் கேமிராவால் ஒரு மாஸ் கிரியேட் பண்ண தெரியலைனுதான் சொல்லனும்.

இன்டர்வல் சீன் இதே சீன் துப்பாக்கிலையும் வரும் இரண்டிலும் ஒரே டயலாக்தான் துப்பாக்கில டயலாக்க சொல்லி முடிச்சதும் விஜயையோட கண் ஒரு ஷார்ப்பா காட்டி ஒரு பக்கம் ஷேடோ விழுந்தமாதிரி காட்டியிருப்பார் சந்தோஷ்சிவன் செம மாஸ் சீன். ஆனா இதுல அதே சீனா சும்மா லோ ஆங்கிள்ல எடுத்து ஒரு விறுவிறுப்பே இல்லாம இருக்கும்….

அதேபோல் விஜய் குழாய்யிலிருந்து மேலே எழும்பொழுதும் ஒரு டெம்பர் இல்லை.

குழாயில் தலைகீழாக ரொடேட் செய்து விஜய் குளோசப்பில் செல்லும் காட்சியில் இவர் திறமையை காட்டியிருக்கிறார். எங்கோ காப்பியடிக்கப்பட்டதாக இருந்தாலும் நல்லா இருந்தது.

அனிரூத்-

திரைப்படத்தில் பெரிய பிளஸ்ஸாக நினைக்கப்பட்டவர். டிரைலர் தீம் மீயுசிக்கால் எதிபார்ப்பை ஏற்படுத்தியவர். படத்தின் பெரிய மைனஸ் இவர்தான். விஜயின் மொக்கை படங்களிலும் அவரில் ஆல்பங்கள் சூப்பரா இருக்கும். விஜய் படங்களில் மொக்கை ஆல்பம் இதுவாகதான் இருக்கும். செல்பிபுல்ல பாடல் மட்டுமே விஜயின் குரலில் நன்றாக உள்ளது… அதற்கு அடுத்து மனதில் நிற்கும் பாட்டு “யாரு பெத்த புள்ளையோ”. விஜய் படத்தில் ஓபனிங்க சாங் அட்லீஸ்ட் கேட்டிருக்கியா இல்லையா அனிரூத் … இதில் ஓபனிங்சாங் அத கேட்டதவிட பார்க்கும் போது ரொம்ப கடுப்பா இருக்குயா…

பின்னணி இசைனா என்னனு கேட்கற அளவிற்கு இசையமைத்து எரிச்சலடைய செய்திருக்கிறார். காப்பியடிச்சாலும் தேவா சூப்பரா போடுவாருப்பா பாட்சா படத்தயாவது பாருயா…

எப்ப பார்த்தாலும் அந்த தீம் மீயுசிக்கயே பயன்படுத்துகிறார்… அது 2மேப் சீன,; குழாய் சீன்;களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

சூப்பர் கான்செப்டான அந்த காசு சுண்டிவிடுற சண்டைக்காட்சியின் விறுவிறுப்பையே தனது பின்னணி இசையால் குறைத்து விடுகிறார். சண்டைக்காட்சிகளில் ஏன்யா பின்னணி இசை ஹாலிவுட் படத்திலயே சேசிங் சீன்ஸ்ல மட்டும்தான்யா போடுவானுக.

தமிழ்நாடே ஹீரோ குழாயிலிருந்து வெளிய வருவதை எதிர்பார்த்திட்டிருக்காங்க வில்லன் அவன் வெளிய வரமாட்டானு இருக்கான் வெளிய தலைய காட்டும்போது உன் மியுசிக்லயே நீ அப்படியே டாப் கியர போட்டு தூக்கியிருக்க வேண்டாமா. அட போயா… வேலையில்ல பட்டதாரில நல்லா தனயா பண்ணிருந்த…. ரொம்ப நல்லா பண்றேன்னு கோட்ட விட்டுட்டியோ…

அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து ஒரு முக்கியமான பிரச்சனையை மாஸ் ஹீரோவைக் கொண்டு சரியாக கையாண்டு மிக்பெரிய வெற்றியையும் முருகதாஸ் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்….

எம்என்சி கம்பெனி வந்து எல்லா விளைநிலங்களையும் ஆக்கிரமிக்கிறது என்பது உண்மைதான்… எங்க ஊர்லையும் விளைநிலங்கலெல்லாம் காணவில்லை ஆனா எம்என்சி கம்பெனியும் இல்லை…

சமூப்பிரச்சனைக்காக அதிகமாக சத்தம் போட்டு நம்மை குத்திக்காட்டிவிட்டும் சென்றிருக்கிறது

கத்தி – கூர்மை

4/5

No comments:

Post a Comment