Thursday, November 27, 2014

அன்எம்ளாய்டட் யங்ஸ்டர்ஸ் (Unemployed Youngsters)

அரசு வேலை மட்டும் தான் எம்ப்லாய்மெண்ட் அரசு பணியில் இல்லாதவர்கள் அன்எம்ளாய்டட் ??? இது சில அரசு வேலையில் உள்ளவர்கள் மற்றும் சில பொதுமக்களின் டயலாக். அப்போ மற்ற தொழில்கள் வேலைகள் எல்லாம் வைலையில்லையா?? உங்கள் அன்றாட தேவைகளை நீங்கள் சொல்லும் எந்த எம்ளாய்மெண்டில் (அரசு) பூர்த்தி செய்து கொள்கிறீர்கள். நீங்கள் சம்பளம் வாங்குவது அரசு வேலையாக இருக்கலாம் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது யார்???
அரசு வேலை மட்டும்தான் வேலை என்ற மனபோக்கை மக்கள் மனதிலும் உண்டாக காரணம் பெரும்பாலன அரசு ஊழியர்களின் ஆடம்பர வாழ்வும் எந்த பிரச்சனைகளும் அவர்களுக்கு இல்லை என்பதும் தான்.
இப்படியாக எல்லோரிடமும் இந்த மனப்போக்கு இருந்தால் அது சமுதாய ஆரோக்கியத்திற்கு முரணானது.
இத்தனை அரசு ஊழியர்களில் மக்கள் மனதில் நிற்பவர்கள் எத்தனை பேர்.
உங்கள் ஊழியர் சங்க கூட்டங்களில் எத்தனை முறை நாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். நம் வேலையை விரைந்து முடிக்க என்னென்ன நடவடிக்கைகள் செய்ய வேண்டும். என்று தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். லஞ்சம் வாங்கினார் என்று எத்தனைபேரை உங்கள் சங்கங்களை விட்டு நீக்கியிருக்கிறீர்கள்.
ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்று பிடிபட்டால் அவரை விடுவிக்க எவ்வளவு பிரசர் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பீர்கள். அதற்கும் உங்கள் சங்கங்களிலே லஞ்சம் வாங்குவீர்கள்.
சரியாக தன் கடமையை செய்பவர் ஒரு அரசு அலுவலகத்தில் இருந்தால் அவருக்கு அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் எத்தனை பட்டப்பெயர். மேலும் அவர் வேலையை கெடுக்க எத்தனை இடஞ்சல்கள் கொடுப்பீர்கள்.
தனியார் நிறுவனத்தில் மெசின் போல் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர். அரசு வேலை கிடைத்ததும் நேர்மாறாக மாறிவிடுவதையும் நாம் உணர்ந்திருப்போம்.
என்னடா டைட்டில விட்டுமேட்டர் வேற மாதிரி போகுதே அப்படினு யோசிக்கலாம்.
அரசு வேலையில் இல்லாதவர்களை அப்படி நினைக்க வைக்க காரணம் தனியார் கம்பெனியில் வேலை சரியாக செய்யவில்லை என்றால் உடனடியாக அவரை வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். ஆனால் அரசு வேலையில் அப்படி வாய்ப்பில்லை. பல அலுவலகங்களில் மேலதிகாரிகளா அதிகாரம் இல்லாதவர்களாகதான் இருப்பார்கள்.
தேசத்தலைவர்கள் தேசத்திற்கு உழைத்த பலர் அரசு வேலையில் இல்லாதவர்கள்.
எங்காவது ஒரு சமூக நீதிகேட்டு நியாத்திற்கு போரடும் ஒருவன் அரசு வேலையில் இல்லை. அவன் வேலையில்லாதவன்.
சமூக பொறுப்பு அதிகம் இருக்க வேண்டியது அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தான்.
ஆனால் அது ஏனோ நம் தேசத்தில் குறைவு
(நல்ல அதிகாரிகள் இல்லை என்று சொல்லவில்லை அவர்களும் இருக்கிறார்கள்)

No comments:

Post a Comment