Monday, December 1, 2014

தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம்


தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம் பற்றி நிறைய விழப்புணர்வு விளம்பரங்களை தற்போது அரசு அதிகப்படுத்தியிருப்பது ஆரோக்யமான ஒன்றாக இருந்தாலும். தற்போதைய அரசு தூய்மை இந்தியா போன்ற பிரச்சாரங்களை முன்னிறுத்தி விடுகிறார்களே தவிர அதன் செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றி சரியாக விவரிப்பதில்லை. அதேபோல் பெரும்பாலும் அவசரகதியில் அனைத்தையும் செயல்படுத்துவதாக உள்ளது.
சாலையை சுத்தம் செய்வது என்பதை விட சாலைகளில் குப்பைகளை போடுவதை தவிர்ப்பதே சிறந்தது. அப்படியென்றால் குப்பைகளை எங்குபோடுவது அதற்கான வசதிகள் இருக்கிறதா?. ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என குப்பைத்தொட்டியை தேடினால் குப்பைத்தொட்டிகள் பெயரளவில் அதுவும் வெகு தூரங்களில் தான் வைக்கப்பட்டுள்ளது ஒருவர் தன் கையில் இருக்கும் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என நினைக்க வைக்கவே பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டியுள்ள நிலையில் அவரை குப்பைதொட்டி தேடி வெகு தூரம் செல்வதென்பது வாய்பில்லாத ஒன்று. குறைந்தது 100 அடிக்கு ஒரு குப்பைத்தொட்டி என நகர்புரங்களில் நிறுவுவது இந்த திட்டம் வெற்றியடைய 100 சதவீதம் உதவியாக இருக்கும். பிரபலங்களை தெரு கூட்டுவதுபோல் நடிக்க கூப்பிட்டு பயன்படுத்தாமல். பிரபலங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு நகரங்களாக குப்பைத்தொட்டிகளை ஸ்பான்சர் செய்யலாம்.
பிறகு திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது பற்றிய விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது. ஒருவர் சிறுநீர் கழிப்பதை கைத்தட்டி அவர் சிறுநீர் கழிக்காமல் தடுப்பது போல் அந்த விளம்பரம் இருக்கிறது. சரி நகர்புறங்களில் இருக்கும் ஒருவர் சிறுநீர் கழிக்கவேண்டுமால் எங்கு சென்று கழிக்க முடியும். உதாரணமாக நமது அறந்தை நகரத்தை எடுத்துக்கொண்டால் ஒருவர் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமானால் எங்கு செல்வார். அதற்கான வசதியை அரசு செய்து கொடுத்திருக்கிறதா. இங்கு இருக்கும் தொழில் நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை வசதி உள்ளதா.??? தொழில்நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை கட்டாயமாக்கப்பட்டு அதை தரைத்தளத்தில் அனைவரும் பயன்படுத்தும் படி வைக்கவேண்டும். அதை தூய்மைபடுத்தும் பணியை அரசு ஏற்றுக்கொண்டால் பெயரளவிற்கு பொதுக்கழிவறை அமைக்க தேவையில்லை...

No comments:

Post a Comment