Sunday, October 11, 2015

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்
--------------------------------------------------------------------
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நடிகர்களின் கோரிக்கை மற்றும் அவரது ரசிகர்களின் கோரிக்கை அதுவும் அரசு கட்டித்தர வேண்டுமாம்.
அவரு நடித்த படத்தை காசு கொடுத்து நம்ம தாத்தா கhலத்தில் இருந்து நாம் வரை பார்த்தாச்சு அதுல அவரு பல கோடி சொத்தும் சேர்த்தாச்சு
அவரு பேரன் என்னனா ஒரு உயரமான இந்தி நடிகர பார்த்தா தாத்தா ஞாபகம் வருதுனு நகைக்கட விளம்பரத்தில் சொல்றாப்பல அவரு மகன் என்னனா அப்பா அப்பானு அப்பா பேர வச்சு இன்னும் கோடி கோடியா சம்பாதிக்கராப்ல.
இதுல பலகோடி ரூபாய் செலவில் ஷாப்பிங்க் காம்ளக்ஸ் கட்டப்போறாங்கனு வேற பேச்சு. ஏன் அவங்க அவங்களோட அப்பாக்கு தாத்தாக்கு மணிமண்டபம் கட்டமாட்டாங்களா?
கோடிகோடியா சம்பாதித்தாலும் வரியே கட்ட மாட்டோம்னு அடம்பிடிக்கிற நடிகர்கள் பணம் ஒதுக்கி கட்டமாட்டாங்களா.
இப்பவும் இந்த ஏமாளிப்பயலுக நாங்கதான் கிடைத்தோமா?
இப்படி ஒவ்வொருகாலகட்ட நடிகர்களுக்கும் மணிமண்டபம் சிலைனு கட்டின தமிழ்நாடு முழுவதும் ஒரே நடிகர்களின் சிலையும் மணிமண்டபமும் தான் இருக்கும்.
முதலில் அரசு பணத்தில் மணிமண்டபம் கட்டுவது சிலை வைப்பதற்கு தடை விதிக்கனும்.

Saturday, June 20, 2015

எச்சில்

என் எச்சில்
ஐஸ்கிரீம்
அத்தனை சுவையென்றாய்
ஆம்
சற்று முன்தான்
உன் பேர் 
உச்சரித்தேன்

Tuesday, June 2, 2015

மாறிய மாரி

மும்மாரி
வந்து
முப்போகம்
தந்தாய்
முப்பருவம்
முறைமாறி
பொழிந்து
பொய்த்ததேனோ

Monday, May 18, 2015

உயரே பறந்த தேசியகொடி

ஊழல் அமைச்சர் 
கைபட்டு
தலைகுனிந்து நின்று...
மாணவர்களின் 
தேசியகீத காற்றில்
உயரே பறந்த
தேசியகொடி

Sunday, May 17, 2015

எஸ்டேட்

காட்டை குடித்த
காபி எஸ்டேட்
நாட்டை குடித்த
ரியல் எஸ்டேட்

Wednesday, May 13, 2015

நிலவில்லா பௌர்ணமி

என்
வானில்
பௌர்ணமியிலும்
நிலவில்லை
நீயில்லை

Monday, February 9, 2015

என்னை அறிந்தால்!!!! எவருக்கும் புரியல


அனுஷ்கா-
அரை மணிநேரம் லேட்டாகி போய் சீட்ல உட்கார்ந்தா திரையில அஜித்தும் அனுஷ்காவும் பக்கத்து பக்கத்து சீட்ல ப்ளைட்ல உட்கார்ந்திருக்க. அனுஷ்கா சந்தோஷ்சுப்ரமணியன் ஜெனிலியா மாதிரி பேசுதோனு நினைத்தால் இது மூன்றாம் உலக அனுஷ்காவாவுல இருக்கு நரைத்த தலையுடன் 45 வயசு ஆள புகழ்ந்து தள்ளுது அமெரிக்காவுல இருந்து வருதுனு சொன்னாங்க இது என்னனா வாழ்க்கையில கோ-எட்டே பள்ளிகூடமே போகாத ஏதோ மூன்றாம் உலகத்தில் இருந்து வர மாதிரி பேசுது… ஓபனிங்கேவா???

திரிஷா-
சரி அடுத்து என்னனு பொறுமையா உட்கார்ந்தா வராணம் ஆயிரம் சூர்யா நாசரா இருக்காரு. அடுத்த சீன்ல அடடே கமல்னு பார்த்தா வேட்டையாடு விளையாடு கமல் அஜித்தா வராப்ல. இந்த ரசத்தையும் கறிக்குழம்பையும் சேர்த்து சாப்பிட்டா அது ஒரு தனி டேஸ்டா இருக்கும் ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்க பிடிக்காது. வேட்டையாடு விளையாடு கமலினி முகர்ஜியையும் ஜோதிகாவையும் சேர்த்து பிசைந்த கேரக்டர்ல திரிசாபுள்ள. சொல்லப்போன அதுதான் கொஞ்சம் அழகா இருந்துச்சு. 

அருண்விஜய்-
இடையில என்னடா பழைய படம் காக்ககாக்க டிரைலர் போடுரானுக பார்த்தா அதிலும் அஜித் இருக்கார். அப்பறம் தான் தெரியுது அது வில்லன் அருண்விஜய். சரி படத்திலயே அருண்விஜய்தான் செம அப்படினெல்லாம் சொன்னாங்களே இவர் வேர டிவில ஆனந்த கண்ணீரெல்லாம் விட்டாரே அப்படி என்ன பெர்பார்மென்ஸ்சுனு பார்த்தா சும்மா படம்முழுவதும் தாவிட்டு குதிச்சுட்டு முறைச்சிட்டு கிளைமாக்ஸ்ல வேட்டையாடுவிளையாடு இளாமாதிரி ஓடிட்டு காக்க காக்க பாண்டியா மாதிரியே பேசி போன்ல மட்டும் பெர்பார்மென்ஸ் பண்ணிருக்கார் சரி ஓகே ரகம்.(இதுல அருண்விஜய் தவறு எதுவும் இல்லை.)

கேமிரா-
வெளிநாட்டுகாரராம் இதுவரை எங்க ஊர் தியேட்டர்ல படம்பார்த்து தெளிவா தெரிந்த முதல் படம் இதுதான் கௌதமின் வழக்கமான கேமிரா சென்சுக்குள்ளேயே இருந்து அவரோட திறமையையும் காண்பித்திருக்கிறார். நீங்க உங்க ஊருக்கே போயிருங்க எங்க ஊரெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது.

இசை-
உங்களை சொல்லி குத்தமில்ல உங்ககிட்ட இருக்கது அந்த நாலு டியூன் தான்னு தெரிஞ்சு தானே வர்றாங்க. டயலாக்கே புரியாம இருக்கவனுக்க ஏதோ உங்க பாட்டு மட்டும் கொஞ்சம் புரிந்து ஆறதல் தருது.. பிஜிஎம்ல ஒரு டியுன வச்சே படம் முழுக்க ஓட்டிட்டீங்க…

சண்டை-
அது என்னனு தெரியல சண்டை ஆரம்பித்ததுமே இருட்டாகிடுது எவன எவன் அடிச்சான் என்ன நடந்ததுனே தெரியல. அஜித் மட்டும் தப்பிச்சிடுறார். 

இயக்குனர் கொளதம்-
ஏன் பாஸ் நீங்க லைப் கொடுத்தவரே உங்கள நம்பல ஒரு பெரிய ஹீரோ கிங் ஆப் ஓபனிங் கால்சீட்கொடுத்து உங்கள காப்பாற்றி விடுவோம்னு நினைச்சிருக்காப்ல அதை சரியா பயன்படுத்திருக்கலாமேப்பு. அவர் உங்க பட்தில நடிக்கனும்னு சொன்னது உங்க டைரக்சன்ல பாஸ் நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு உங்க படதில் இருக்கிற ஒவ்வொரு ஸீனா உருவி அவர நடிக்க வச்சிருக்கீங்க. ஆனா உங்களுக்க ரொம்ப குசும்புங்க இதுல ட்விஸ்ட் வேற. அந்த ஆர்கான் மேட்டர வச்சு மட்டுமே பிரிச்சு மேஞ்சிருக்கலாமேப்பு அருண்விஜய்க்கு கொடுத்திருக்கற கேரக்கடர்ல கூட நடிக்க தயங்காத ஒரு ஹீரோ கிடைத்தும் தவறவிட்டுட்டீங்களே. உங்களோட இந்த படத்தை ஒரு பாடமாகவே எடுக்கலாம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் எப்படி இருக்கக்கூடாதுனு தெரிஞ்சுக்க.

அஜித்-
சிலர் இது அஜித் படமில்ல கௌதம் படம்னு சொன்னாங்க. அப்படியெல்லாம் இல்லை. அஜித் மட்டும் தான் படம். இல்லைனா இந்த படம் 2 நாள் ஓடுரதே கஷ்டம்தான். அடுத்தடுத்த படங்களில் அஜித் தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே போகிறார். குறிப்பாக தமிழ் உச்சரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி நடிக்கிறார். ஆனா இந்த டயலாக்தான் யாரு பேசுறதுமே புரியல. அஜித்திற்கு இந்த படம் ஒரு பின்னடைவா இருக்காது. (கௌதமிற்கு இனி யாரும் கால்சீட் கொடுப்பாங்களாங்கறதே சந்தேகம்தான்). அஜித் இயக்குனர்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறார் என்று இதிலிருந்தே தெரிகிறது.
பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்துல ஒரு டயலாக் வரும் படத்த எடுத்து அவங்க போட்டுப்பார்ப்பாங்களா இல்லையானு அந்த லிஸ்ட்ல இதையும் சேர்த்துக்கலாம்.

மொத்தத்தில் என்னை அறிந்தால் – எவருக்கும் புரியல…

Tuesday, February 3, 2015

PCR Act


PCR Act
இது நிறைபேருக்கு பயத்தை ஏற்படுத்தும் சட்டம்... உயர்மட்டத்தினர் என்று கூறிக்கொண்டு ஏளனமாக கேலியாக நினைத்து தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி அவர்கள் மேல் ஆதிக்க வர்க்கத்தினர் செய்த கொடுமைகளிலிருந்து காக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது... இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டதிலிருந்து கீழ்மட்டம் என்று கூறப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட சொல்லப்போனால் ஒரு விடுதலை கிடைத்ததென்று கூட சொல்லலாம்...
இந்த சட்டம்...
தாழ்த்தப்பட்டவர் என்று ஏளனமாக ஒரு பார்வை பார்த்தால் கூட குற்றம் என சொல்கிறது...
ஜனநாயகம் இது அவர்களுக்கு கொடுத்த ஒரு விடுதலை என்றும் சொல்லாம்...
ஆனால் இன்று அந்த சட்டம் பல வழிகளில் தவறாக பயன்படுத்தப்படுகிறது..
சொந்த காரணங்களுக்கும் தவறை மறைக்கவும் கூட இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது..
ஒருவரை ஏளனமாக பார்த்தால் கூட குற்றம் என அவருக்கு எப்படி தனிமனித உரிமை இருக்கிறதோ...கொடுக்கப்பட்டிருக்கிறதோ...
அதேபோல் நீ எனக்கு அடிபணியவில்லையென்றால் உன்மேல் PCR கேஸ் கொடுத்துவிடுவேன் என மிரட்டுவதும் அதே குற்றத்திற்கு சமம்... சொல்ப்போனால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் கூட...

Saturday, January 17, 2015

”ஐ” எனது பார்வையில்


”ஐ” தமிழ் சினிமாவில் மிகுந்த பொருட்செலவில் பெரும் எதிர்பார்ப்பு என விக்ரமின் கடின உழைப்பு மற்றும் சங்கரின் பிரம்மாண்டத்துடன் வெளிவந்திருக்கும் திரைப்படம்

கதை- பல படங்களில் பார்த்த பழிவாங்கள் கதை …. டிரெய்லரை பார்த்தே பாதி கதையை யூகித்துவிடலாம். சங்கருக்கும் மணிரத்தனத்திற்கும் சுஜாதா போன பிறகு கதை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்பதை ஐ-யை வைத்து தீர்மானித்துக்கொள்ளலாம்.

இசை- அதான் ரகுமான் நான் பிசி பிசினு சொல்றாரே அப்பறம் ஏன் அவர டிஸ்ட்ரப் பண்றீங்க. இவ்வளோ பெரிய படத்திற்கு ஏனோ தானோவென்று இசையமைத்தது போல் உள்ளது…. ஏதோ ஒன்று இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து பழகிவிட்டதால் திரையில் புரிகிறது… பின்னணி இசையும் அவ்வளவாக மெனக்கெட்டதாக தெரியவில்லை

எமிஜாக்சன்- விளம்பர மாடல் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் நடிக்கவும் செய்திருக்கிறார். விட்டால் ஆடைகளே இல்லாமல் நடிப்பார் போலும் சில காட்சிகளில் ஆடை அணிந்திருக்கிறாரா என்பதே சந்தேகம் தான். அவர் வரும் பெரும்பாலன காட்சிகளில் ஆபாசம். இதுக்கு யு சர்டிபிகேட் வேறு வேண்டுமாம்.

சந்தானம்- எந்திரன்ல டம்மியா வச்சிருந்தார் சங்கர்… சரி இந்த படத்திலாவது பெரிதாக இவரை பயன்படுத்தியிருப்பார் என நினைத்தால் நம்மை மட்டுமல்ல சங்கர் சந்தானத்தையும் ஏமாற்றியிருக்கிறார். சந்தானம் சங்கரிடம் கேட்டிருப்பாப்ல போல ”என்ன சார் எனக்கு காமெடி சீக்வென்சே இல்லைனும்” சங்கர் சொல்லிப்பாபாப்ல போல ”கிளைமாக்ஸ்ல நீங்கதான் சந்தானம் பின்றீங்க” அவன் அவன் இருக்குற கடுப்புல சந்தானம் வேற கமெடி பண்றேனு கிளைமாக்ஸ்ல அடங்கப்பா வில்லன்களுக்கு இருக்கும் எரிச்சலை விட நமக்கு அதிகமாக வருது…. ஆனாலும் அந்த காமெடிக்கு பக்கத்தில் குழந்தைகளின் சிரிப்புச்சத்தமும் கேட்கிறது…

ஒளிப்பதிவு- ஸ்ரீராம் இவரை ஒளிப்பதிவில் அடித்துக்கொள்ள ஆள் இல்லை சங்கரின் பொருட்செலவான பிரமாண்டத்தை இவரின் கேமரா இன்னும் 100 மடங்கு அதிகப்படுத்திகாட்டுகிறது. சஸ்பென்ஸ் காட்சிகள் மற்றும் விக்ரம் அதுக்கும் மேல என்று சொல்லும் இடங்களில் ஒரு மாஸ் இல்லை…

இதர நடிகர்கள்- சிவாஜியின் மூத்த வாரிசு இதில் சும்மா தலைகாட்டாமல் முழு வில்லனாக நடித்திருக்கிறார். இவருடன் நான்கு வில்லன்கள் அனைவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அந்த திருநங்கை கேரக்டர் எதற்கு அதை ஒரு பெண்ணாகவே கற்பனை செய்திருக்கலாம். சங்கர் அந்த திருநங்கையை வைத்து காமெடி என நினைத்து எடுத்த காட்சிகள் ஒரு வித பரிதாபத்தையும் சங்கரின் மேல் கோபத்தையும் தான் ஏற்படுத்துகிறது. உங்க கற்பனை அவ்வளவு கேவலமாவா போச்சு…

சங்கர்- மீண்டும் சங்கர் தான் ஒரு பிரமாண்ட பட வியாபாரி என நிரூபித்து விட்டார். ஆனால் படைப்பாளி சங்கர் எங்க… லவ் சஸ்பென்ஸ் திரில்லர் படம்னு சொன்னீங்க லவ் ஒரு வித சளிப்புடன் இருந்தது ஓகே… சஸ்பென்ஸ் திரில்லர் எங்க… உங்களுக்கு யார் இந்த பிளாஸ்பேக் திரைக்கதை ஐடியாக கொடுத்தது. பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தையும் சளிப்பையும் ஏற்படுத்தும் ஒரு மொக்கை திரைக்கதை… பாடல்காட்சிகளுக்கு மட்டும் அதிக நேரம் சிரமம் எடுக்காம கதை திரைக்கதையிலும் கவனம் செலுத்துங்கள்… ஏதோ பல படங்கள் தங்களுடன் போட்டிக்கு வராததால் தப்பித்திருக்கிறீர்கள்..

மேக்கப்- படத்தின் அடுத்த ஹீரோ சொல்லப்போனால் படமே மேக்கப்தான்… சூப்பர்

விக்ரம்- என்னடா விக்ரம் பத்தி கடைசிலனு கேட்கலாம்…. மொத்த படமுமே விக்ரம் விக்ரம் விக்ரம் உழைப்பு உழைப்பு ….. மனிதர் நடிப்பில் தனது உழைப்பில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார். மெட்ராஸ் பாசை மட்டும் கொஞ்சம் முரண்படுது…. மற்றபடி ரசிகர்கள் முழுப்படத்தையும் பார்க்க உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் விக்ரம் என்ற நடிகருக்காக தான்… அவர் முகம் காட்டும் அத்தனை காட்சிகளிலும் கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ். கண்டிப்பாக அனைவரும் பார்த்து பாரட்ட வேண்டும்.
சண்டைக்காட்சிகள் விசுவல் டிரீட். கேஎஸ் ரவிக்குமார் இனிமே ஸ்பைடர் மேன் பேட்மேன சப்போர்ட்டுக்கு கூப்பிட வேண்டாம். இனி ஐ விக்ரம் பண்ணும்போது நாங்க செய்யக்கூடாதானு சொல்லலாம்.

ஐ- எதிப்பார்த்ததை விட அதிகம் திறமைகாட்டி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் விக்ரம்… ஆனால் இயக்குனர் சங்கர் ஏமாற்றிவிட்டார்.

-சுமார்


பாசிட்டிவ்
நெகட்டிவ்
விக்ரம்
கதை
விக்ரம்
திரைக்கதை
விக்ரம்
இசை
ஒளிப்பதிவு
திரில்லர்




Wednesday, January 14, 2015

பொங்கல் ஸ்வீட் கடையின் பண்டிகைகால சிறப்பு டிஷ்ஷாக மாறிவிடும் போலும்

பொங்கல் கரும்பும் சர்க்கரைப்பொங்கலும் தான் கண்முன் தெரியும் பொங்கல் வரும் வாரத்தின் முதல் வாரமே பொங்கல் பண்டிகையின் எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். தினமும் வடமாட்டு திடலில் நடைபெறும் பணிகளை நண்பர்கள் குழுவாக சென்று பார்த்துவிட்டுவருவது...

பொங்கல் தினத்தன்று எங்கள் ஏரியா சாலை முழுவதும் கரும்பு தோகைகள் தான் இருக்கும் சாலையே தெரியாது. எந்த சாதி மதம் பாராத பண்டிகை ...

ஆனால் இன்று அதற்கான எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் வாழ்த்துகள் சொல்வதோடு சரி...

கரும்பும் எந்த வீட்டையும் நிறைத்ததாக தெரியவில்லை...

எந்த குழந்தைகள் முகத்தி்லும் பொங்கல் என்ற எதிர்பார்ப்போ அதற்கான சந்தோஷ கலையோ இல்லை...

பெரும்பாலும் வெறும் திரைப்படத்தை மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம்...

எந்திர வாழ்க்கையுடன் கொண்டாட்டங்களையும் இழந்துகொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்...


பொங்கல் ஸ்வீட் கடையின் பண்டிகைகால சிறப்பு டிஷ்ஷாக மாறிவிடும் போலும்

Friday, January 9, 2015

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி 09.11.2014

புதியதலைமுறையில் உரக்க சொல்வோம் நிகழ்ச்சி

சினிமா கலைஞர்களின் கற்பனைச் சுதந்திரம் மற்றும் அந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் போராட்டகாரர்கள்

எல்லாரும் அவங்க அவங்க சார்பா நல்லா பேசுனாங்க…

டைரக்டர் கமலக்கண்ணன் இது எங்கள் கருத்து சுத்திரத்தை கற்பனை சுதந்திரம்  நாங்களா உங்கள பாருங்கனு கூப்பிட்டோம்னு சொன்னார்… நீங்க ஏன் போராடுகறீங்க இது மாதிரி உட்கார்ந்து பேச வேண்டியது தானே அப்படினும் சொன்னார்…

ஒரு ஓவியர் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் அப்ப நாங்க அதை பார்த்துக்கொண்டு அவரோட கற்பனைச்சுதந்திரம்னு உட்கார்ந்திருக்கனுமா… ஒரு நிறுவனம் கடவுள்களின் படங்களை ஜட்டியில் பிரிண்ட் செய்து வெளியிட்டார்கள் அதை டிசைன் சுதந்திரம்னு சும்மா இருக்கனுமா…

சரி அது உங்க கற்பனைச் சுதந்திரம்னு சொல்றீங்க …
படம் ஆரம்பிக்கும் போது இதில் வரும் கதையும் கருத்துக்களும் கற்பனைனு போடுறீங்க… முடிவில் விவசாயிகளுக்கு சமர்பணம்னும் முடிக்கிறீங்க…

அப்பறம் அந்த கதை திருட்டு கதைனு சிலர் சொல்ல ஆரம்பிச்சதும் இது ஒரு ஊரோட கதை நான் அவங்க படும் கஷ்டத்தை பார்த்து எடுத்த படம்னு சொல்றீங்க…

7 ஆம் அறிவுனு ஒரு படம்
நடிகர் சூர்யா அந்த பட வெளியீட்டு விழாவில் “ஒரு தமிழரின் புகழ் தமிழர்களுக்கே தெரியாமல் இருப்பதை கண்டு எனக்கு கோபம் இதை கேட்டதும் தமிழுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் எல்லாருக்கும் தமிழனின் பெருமையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதில் நடித்தேன்” அப்படினு சொன்னார் இவர் பேசியது சினமால இல்ல ஒரு பொது மேடையில்….

இதையே டைரக்டர் முருகதாசும் பேசினார்…
ஆனா அதோட வேற்று மொழி பதிப்புகளில் அந்தந்த மாநிலத்தில் இருந்து வருவது போதும் இருக்கும்…
விஸ்வரூபம் கமல் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய படம் அதில் கோவை பற்றி ஒரு வசனம் வந்திருக்கும்… நீங்கள் சொல்வதுபோல் கற்பனை என்றால் அவர் கற்பனை என்ற சொல்ல வேண்டியது தானே ஏன் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்…

அப்படி ஆதாரம் இருந்தால் அதை காட்ட வேண்டாம் ஏன் வேற்று மொழி பதிப்புகளில் வேறு வேறு ஊர்களின் பெயர்களை பயன்படுத்தினார்
இப்படி கற்பனைனு சொல்லிட்டு காசுக்காக எதை எதையாவது கற்பனை பண்ணுவீங்க வேறா யாரும் எதுவும் கேட்கக்கூடாது…
படத்தை ரிலீஸ் பண்ணிட்டு விவாதம் பண்ணலாம்னு நீங்க கூப்பிடுறதே அந்த படத்தை புரோமோட் செய்யதான்… படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னால் நீங்கள் நான் இப்படி படம் எடுத்திருக்கேன் அப்படினு சொல்லி விவாதித்துவிட்டு  ரிலீஸ் செய்லாமே…

அப்பறம் எதுக்கு சென்சார் போர்டு இருக்கு நீங்க அங்கதான் கேக்கனும் என்று சொல்பவர்கள்…
சென்சார் போர்டு எப்படினு உங்களுக்கே தெரியும் அந்த சென்சார் போர்டு ரஜினி, சங்கர் … படங்களையும் சாதாரண டைரக்டர் புது ஹீரோ புது தயாரிப்பாளர் படங்களையும் ஒரே மாதிரி தான் பார்ப்பார்களா…

சந்திரமுகி படதில் வரும் அத்தனை காமெடிகளும் இரட்டை அர்த்த வசனங்களுடனே வரும் … கற்பனை வாதி வேண்டுமானால் “நீங்கள் ஏன் தவறான பார்வையில் பார்க்கிறீர்கள”; என்று கேட்கலாம்…
அப்போ நீங்க ரெட்டை அர்த்தத்தில் அதை எழுதவில்லை என்றால்;… அந்த வசனத்துடன் வடிவேலுவையும் வேலைக்காரியையும் ஒப்பிட்டுக்காட்டியதும் உங்கள் அந்த கற்பனை கருமம் தானே....

இதில் வரும் தடித்த வார்த்தைகளுக்கு ஒரு மியூட் கூட செய்திருக்கமாட்டார்கள்…

ஒரு அரசாங்கந்தை மாற்றவே 5 வருடம் கழித்துதான் முடியும் என்கிறபோது நீங்க படத்தை ரிலீஸ் பண்ணிட்டு நாங்க சென்சார் போடுட்ட கேட்கறதுக்குள்ள என்னென்ன நடக்கும்னு உங்களுடைய அந்த கற்பனை படங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது…

நல்லபடங்கள் நல்லகற்பனையாளர்கள் பலர் இருக்கிறார்கள் உண்மைதான் ஆனால் நாங்கள் திரைத்துறை என்று கூறி அனைவருக்கும் வக்கலத்து வாங்குறீங்க…

போராடுவது தப்புனா இதே திரைத்துறை உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டமும் ஒரு காலத்தில் ஒன்றாக திரண்டு நெய்வேலிக்கெல்லாம் போனீங்களே எதுக்க…

#உங்களுக்கு_வந்தா_இரத்தம்_மற்றவங்களுக்கு_தக்காளிச்சட்னியா….

”நிதி அயோக்”

திட்டகமிசன் சரியா செயல்படவில்லைனு பொருளாதார மேதைகள் அதோட பெயரை ”நிதி அயோக்” என்று மாற்றிவிட்டார்களாம்...
பெயரை மாற்றுவதற்கு ஒரு நியுமராலஜிஸ்ட் போதுமையா... எதுக்குயா எகனாமிக்ஸ்ட்

Thursday, January 8, 2015

கேள்வி2

கேள்வி2ஆளும்கட்சி

சிலமாதங்களுக்கு முன் நீங்க தானே ஆதார் அட்டை நேரடி மானியம்மெல்லாம் கூடாதுனு சொன்னீங்க.. இப்ப நீங்களே வேணும்னு சொல்றீங்க.

”அப்ப நாங்க எதிர்கட்சி”

கேள்வி2எக்ஸ்.ஆளும்கட்சி

சார் நீங்க இப்ப பெட்ரோல் டீசல் விலையெல்லாம் குறைக்னும்னு சொல்றீங்க உங்க ஆட்சிலயும் கச்சா எண்ணை விலை குறைந்தது அப்ப நீங்க குறைக்கலையே
”இப்ப நாங்க எதிர்கட்சி”
ஆளாளுக்கு ஒரு கட்சி அப்பப்ப ஒரு பேச்சி

நல்ல்ல்ல....ஆட்சி