Friday, November 7, 2014

மூடநம்பிக்கை என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு

நான் ரிஜிஸ்டர் மேரேஜ்தான் பண்ணிப்பேன்னு சொல்லலாம் அது அவர் அவர் விருப்பம்.
எனக்கு தாலிகட்டி மேரேஜ் பண்றது பிடிக்கவில்லை. தாலிகட்டினாதா மேரேஜா அப்பதான் நம்பிக்கை வருமா அது மூட நம்பிக்கை என சொல்லி பெரியார் கொள்கையை பின்பற்றுகிறேன் என சொல்பவர்கள்.
கடவுள் நம்பிக்கை என மூடநம்பிக்கையான விசயங்களை செய்பவர்களை விட இவர்கள் எந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பதே புரியவில்லை.
பெரியார் என்ன சொன்னார் என சொல்பவர்கள் ஏன் சொன்னார் என ஏன் சிந்திக்கவில்லை. அவரே நான் சொல்வதை உன் அறிவிடம் கேட்டு உன் அறிவு சொல்வது போல் நட என்றே சொல்லியிருக்கிறா.
ஆனால் இவர்கள் சொல்வதைப்பார்த்தால் இவர்கள் மனதில் பெரியார் கடவுளாக தெரிவதாகவே தெரிகிறது.
தாலிகட்டுனாதான் கணவன் மனைவி என்ற நம்பிக்கையா என கேட்பவர் அப்ப ஏன் ரிஜிஸ்டர் பண்ணாதான் கணவன் மனைவியா உங்க அறிவையே கேட்டு இரண்டு பேரும் சும்மா குடும்பம் நடத்த வேண்டியது தானே...
மேற்கத்திய பாசைல ”லிவ்விங் டு கெதர்”
இதை ஏன் பெரியார் சொன்னார்னு சொல்றீங்க ஆண்டாண்டு காலமா மேற்கத்திய கலாச்சாரம் இதுதானே...
முதலில் பெரியார் என்ன சொன்னார்னு இந்த கடவுள் கொள்கையோட திரியறவங்க மாதிரி கண்மூடித்தனமா திரியாம ஏன் சொன்னார்னு பல பேர் யோசிக்கமா ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும் என்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மூடநம்பிக்கை என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு

Sunday, November 2, 2014

குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்

ஒரு குழந்தை அம்மாவைப்பார்த்து முதல் முதலாக எனக்கு எழுத சொல்லிக்கொடுனு சொன்னான் உடனே அவங்களும் ஒரு நோட் பேனாவ எடுத்து எழுத சொல்லிக்கொடுக்க உட்கார்ந்தாங்க ...
ஆனா அவங்க முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுத்த எழுத்து 'A` ...
முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுக்கும் போது ‘அ‘ னு தாய்மொழில ஆரம்பித்தால் தான் என்ன...
அதே போல் தற்போதைய நவநாகரீக அம்மாக்கள் குழந்தைகள் டாடி , மம்மி என்று தான் கூப்பிட வேண்டும் என்று நினைப்பதோடு குழந்தைகளையும் அப்படியே கூப்பிடவும் பழக்கிவிடுகிறார்கள்...
அம்மா அப்பா என்று தமிழில் கூப்பிடுவது கவுரவ குறைச்சலாகவும் அவமானமாகவும் தோன்றுமானால்... அவர்கள் அவர்களது அம்மா அப்பாவை தமிழில் தான் கூப்பிடுகிறார்கள்.
அப்படி என்றால் அவர்கள் அம்மா அப்பாவை தினமும் தமிழில் கூப்பிட்டு அவர்களை அவமானப்படுத்துகிறார்களா???
ஏன் இந்த போலி சந்தோசம்
எப்படி குழந்தைகள் முதன் முதலாக பேசும் போது அம்மாவையும் அப்பாவையும் தான் கூப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறீர்களோ...
அதை அவர்கள் தமிழில் கூப்பிடுவதுதான் சிறப்பு...
குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்..

Saturday, October 25, 2014

கத்தி




கத்தி

எதிர்பார்ப்புடனும் எதிர்ப்புடனும் விஜய் முருகதாஸ் கூட்டணில் வெளிவந்திருக்கும் படம். படம் எப்படி வெளிய வந்தது என்பதை எந்த படத்திலும் காட்டாத ஒரு டிவி சேனலை காட்டி புரியவைத்திருக்கிறார்கள்

விஜய்- 
முதன் முதலாக சரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய், இதுவரை விஜயை இயக்கிய இயக்குனர்கள் விஜயை அழகாய் பார்த்தார்கள் முருகதாஸ் மட்டுமே அவரை சரியான கதைக்களத்தில் வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

மாஸ், ஹீரோயிசம் என்பதை விஜய்க்கு சரியாக புரியவைத்திருக்கிறார் இயக்குனர். சொல்லப்போனால் விஜய்க்கு சரியான பாதையை துப்பாக்கி முதல் அமைத்துக்கொடுத்துவிட்டார் முருகதாஸ் என்றே சொல்ல வேண்டும்.

விஜய்க்கு சரியான கதை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன் முதலாக கை தட்டி பாராட்டும் அளவிற்கு நடித்திருக்கிறார் விஜய். கண்டிப்பா ஒரு விருது கொடுத்து பாராட்ட வேண்டும்.

சமந்தா-
படத்தின் ஹீரோயின் அவ்வளவுதான் சொல்றதுக்கு வேற எதும் இல்லை. அஞ்சான் அளவிற்கு நடத்துக்காட்டலைனுதான் சொல்லனும்….

கதை மற்றும் முருகதாஸ்-
லாஜிக் ஓட்டைகள் பல இருந்தாலும் அப்படிலாம் இல்லைனா டாக்குமெண்ட்ரி படமாதிரி இருக்குனு இந்த வாய்தான் சொல்லும். சமூகத்தில் ஒரு முக்கியமான பிரச்சனை யாரும் கண்டுகொள்ளாத பிரச்சனை, தூள், தண்ணீர் தண்ணீர் போன்ற படங்களில் ஏற்கனவே கையாண்ட கதைக்களம்தான் என்றாலும் ஒரு சமூகப்பிரச்சனையை ரசிக்கும் அளவு பல திருப்பங்களுடன் முருகதாஸ் தனக்கான ஸ்டைலில் சொல்லி பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

முருகதாஸின் ஸ்டைலில் முக்கியமானது கடைசிகட்ட காட்சிகளில் அனைவரையும் சீட்டின் நுனியில் உடகார வைத்து விடுவார். இதில் அனிரூத்தின் சொதப்பல் பின்னணி இசையையும் மீறி அந்த ஏரி குழாய் போராட்டத்தில் ஹைய் டெம்பர்ல போய்டே இருக்கிறார் இயக்குனர்… அப்புறம் வயதானவங்களை எல்லாம் பயன்படுத்தியது இயக்குனரின் சமுதாய பார்வைக்கு ஒரு சான்று.. ஒரு சில சீன்ல நிமிர்ந்து நில் நினைவுக்கு வந்தது….

வசனம்-
கத்திப்படத்தின் கத்தி வசனம்தான் ஷார்ப்பான வசனங்கள் அனைவரையும் சிந்திக்க தூண்டும் வசனங்கள் படத்தின் அடுத்த ஹீரோ. விஜய் பிரஸ்மீட்ல பேசும் போது ஒவ்வொரு வசனமும் செம மாஸ்… கை தட்டல் பரக்கும் காட்சிகள் அது. அதில் எல்லா பிரச்சனையையும் பேசும் போது மீத்தேன் பற்றி சொல்லுவாய் வாய்ப்பிருந்தால் நண்பர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மீடியாக்களை கேட்கும் கேள்விகள் நருக் சுருக்… அந்த சீன்ல வருவது நம் ஊர் கரார்னு நினைக்கிறேன். Aranthai KRajagopal

வில்லன் நீல் நிதின் முகேஷ்-
நிறையபேருக்கு இவர் யாருனே தெரியல இவர் வெளிநாட்டுகாரர்லாம் இல்ல இந்தியாதான் பாலிவுட்ல ஒரு குறிப்பிடத்தக்க ஹீரோ குழந்தை நட்சத்திரம் முதல் நடித்துக்கொண்டிருப்பவர். விக்ரமோட டேவிட் படத்திலும் நடித்திருக்கிறார். வில்லத்தன எக்ஸ்விரசன்லாம் சூப்பர் ஆனா இவருக்கு வாய்ப்பில்லை… வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வில்லக்கதாபாத்திரம் போலவே டம்மியாக்கப்பட்ட கதாபாத்திரம்

கேமராமேன்- வில்லியம்ஸ்
இவரு ராஜா ராணி கேமரா மேன்தானானு சந்தேகமாக இருக்கிறது. சொதப்பல்களில் கேமிராவும் ஒன்ற பாடல்களில் சரியாக கேமராவை கையாண்டவர் கதைக்களத்தில் தவற விட்டிருக்கிறார். ஒரு கிராமத்தையம் அவர்களின் வறட்சியையும் கேமராவில் சரியாக கையாளவில்லை.

மேலும் விஜய் தனியா எந்த ஹீரோயிசமும் செய்ய வாய்ப்பில்லை. அவரோட எக்ஸ்பிரசனதான் மாஸா காட்டியாகனும் சொல்லப்போனால் விஜயை அழகாக காட்டியவர் கேமிராவால் ஒரு மாஸ் கிரியேட் பண்ண தெரியலைனுதான் சொல்லனும்.

இன்டர்வல் சீன் இதே சீன் துப்பாக்கிலையும் வரும் இரண்டிலும் ஒரே டயலாக்தான் துப்பாக்கில டயலாக்க சொல்லி முடிச்சதும் விஜயையோட கண் ஒரு ஷார்ப்பா காட்டி ஒரு பக்கம் ஷேடோ விழுந்தமாதிரி காட்டியிருப்பார் சந்தோஷ்சிவன் செம மாஸ் சீன். ஆனா இதுல அதே சீனா சும்மா லோ ஆங்கிள்ல எடுத்து ஒரு விறுவிறுப்பே இல்லாம இருக்கும்….

அதேபோல் விஜய் குழாய்யிலிருந்து மேலே எழும்பொழுதும் ஒரு டெம்பர் இல்லை.

குழாயில் தலைகீழாக ரொடேட் செய்து விஜய் குளோசப்பில் செல்லும் காட்சியில் இவர் திறமையை காட்டியிருக்கிறார். எங்கோ காப்பியடிக்கப்பட்டதாக இருந்தாலும் நல்லா இருந்தது.

அனிரூத்-

திரைப்படத்தில் பெரிய பிளஸ்ஸாக நினைக்கப்பட்டவர். டிரைலர் தீம் மீயுசிக்கால் எதிபார்ப்பை ஏற்படுத்தியவர். படத்தின் பெரிய மைனஸ் இவர்தான். விஜயின் மொக்கை படங்களிலும் அவரில் ஆல்பங்கள் சூப்பரா இருக்கும். விஜய் படங்களில் மொக்கை ஆல்பம் இதுவாகதான் இருக்கும். செல்பிபுல்ல பாடல் மட்டுமே விஜயின் குரலில் நன்றாக உள்ளது… அதற்கு அடுத்து மனதில் நிற்கும் பாட்டு “யாரு பெத்த புள்ளையோ”. விஜய் படத்தில் ஓபனிங்க சாங் அட்லீஸ்ட் கேட்டிருக்கியா இல்லையா அனிரூத் … இதில் ஓபனிங்சாங் அத கேட்டதவிட பார்க்கும் போது ரொம்ப கடுப்பா இருக்குயா…

பின்னணி இசைனா என்னனு கேட்கற அளவிற்கு இசையமைத்து எரிச்சலடைய செய்திருக்கிறார். காப்பியடிச்சாலும் தேவா சூப்பரா போடுவாருப்பா பாட்சா படத்தயாவது பாருயா…

எப்ப பார்த்தாலும் அந்த தீம் மீயுசிக்கயே பயன்படுத்துகிறார்… அது 2மேப் சீன,; குழாய் சீன்;களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

சூப்பர் கான்செப்டான அந்த காசு சுண்டிவிடுற சண்டைக்காட்சியின் விறுவிறுப்பையே தனது பின்னணி இசையால் குறைத்து விடுகிறார். சண்டைக்காட்சிகளில் ஏன்யா பின்னணி இசை ஹாலிவுட் படத்திலயே சேசிங் சீன்ஸ்ல மட்டும்தான்யா போடுவானுக.

தமிழ்நாடே ஹீரோ குழாயிலிருந்து வெளிய வருவதை எதிர்பார்த்திட்டிருக்காங்க வில்லன் அவன் வெளிய வரமாட்டானு இருக்கான் வெளிய தலைய காட்டும்போது உன் மியுசிக்லயே நீ அப்படியே டாப் கியர போட்டு தூக்கியிருக்க வேண்டாமா. அட போயா… வேலையில்ல பட்டதாரில நல்லா தனயா பண்ணிருந்த…. ரொம்ப நல்லா பண்றேன்னு கோட்ட விட்டுட்டியோ…

அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து ஒரு முக்கியமான பிரச்சனையை மாஸ் ஹீரோவைக் கொண்டு சரியாக கையாண்டு மிக்பெரிய வெற்றியையும் முருகதாஸ் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்….

எம்என்சி கம்பெனி வந்து எல்லா விளைநிலங்களையும் ஆக்கிரமிக்கிறது என்பது உண்மைதான்… எங்க ஊர்லையும் விளைநிலங்கலெல்லாம் காணவில்லை ஆனா எம்என்சி கம்பெனியும் இல்லை…

சமூப்பிரச்சனைக்காக அதிகமாக சத்தம் போட்டு நம்மை குத்திக்காட்டிவிட்டும் சென்றிருக்கிறது

கத்தி – கூர்மை

4/5

Thursday, October 23, 2014

எந்திரமயமான தீபாவளி கொண்டாட்டங்கள்...

முன்னெல்லாம தீபாவளினா ஒரு வாரமாவே ஒரு ஆவலோடு இருப்பாங்க அது மட்டும் இல்லாம தீபாவளி அன்றைக்கு அனைவரும் ஆனந்தமா கொண்டாடுவாங்க..
இப்பவும் எல்லாரும் ஹேப்பியாதான் இருக்காங்க ஆனா அதற்கான காத்திருப்பு கொண்டாட்டம் கொஞ்சம் குறைவாதான் இருக்கு...
காரணம் - முன்னெல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்குதான் எல்லாரும் டிரெஸ் எடுப்பாங்க அந்த டிரெஸ்ஸ போட்டுட்டு வெளிய வரும்போது ஒரு ஆனந்தம் அந்த சந்தோசமே தனி...
ஆனா இப்ப குறைந்தது ஒரு 6 மாதத்திற்கு ஒரு முறையாவது டிரெஸ் எடுத்திடுறோம்...
அது போல் பலகாரம்- கேஸ் அடுப்பு இல்லாம விறகு அடுப்பிலேயே பல வகையான பலகாரங்கள் செய்து பக்கத்து வீட்டில் நண்பர்களுக்கு கொடுக்கும் போது. நம்ம வீட்ல செய்தது எல்லாரும் நல்லா இருக்கனும்னு சொல்லனும்னு ஒரு ஆவலோட ஆனந்தத்தோட கொடுப்போம்... நண்பரும் அதை ஆவலுடன் வாங்க நம்ம வீட்டு பலகாரத்தில் என்னென் அயிட்டம் என்ன ஸ்பெசல்னு பார்ப்பார்...
இப்ப கேஸ் அடுப்பே இருந்தாலும் பலகாரம்கரது பேக்கரி அயிட்டம்தான் அது நல்லா இருக்குனு சொல்லனும்னு யாரும் விரும்பமாட்டோம் ஒரு சம்பிரதாயமா கொடுப்போம்...
நாம கொண்டுபோய் கொடுப்பவரும் ஒரு ஆவலோட வாங்கமாட்டார்....
அப்ப பொதிகை டிவி மட்டும்தான் அந்த புரோகிராம்ஸ அவ்வளவா விரும்பி பார்க்க மாட்டோம்...
இப்ப பேக்கரில வாங்கிட்டு வந்த பலகாரமா இருந்தாலும் பசங்களிடம் இதை கொண்டு போய் கொடுத்திட்டு வாங்கப்பானு சொன்னா...
அட இருமா தலைவர் பேசுரார் தலைவலி பேசுறார்னு போகமாட்ராங்க...
எங்க ஏரியாவில் தீபாவளி அன்றைக்க நடந்து போனா ரோடே தெரியாது பேப்பராதான் இருக்கும்...
இப்ப அப்படி யாரும் கொண்டாடுறதா தெரியல ...
இப்ப குழந்தைகளுக்கான விழாவாகவும் ஒரு சம்பிரதாய கொண்டாட்டமாகவுமே தீபாவளி கடந்து செல்கிறது...
இப்படி கொண்டாடுற தீபாவளியாவது மிச்சம் இருக்கட்டும்...
வரும் காலங்களில் ஆன்ராய்டு போன்ல பட்டாச விட்டுட்டு இன்பாக்ஸ்ல வந்து ஸ்வீட்ட போட்டுட்டு (போட்டாவா) போகம இருந்தா சரி

Tuesday, September 30, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்
-----------------------------------------------
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அட இவ்வளவு எளிமையா ரசிக்கும் படி ஒரு படம் எடுக்கமுடியுமா என ரசிக்க வைத்த இயக்குனர் இரஞ்சித்தின் அடுத்த படம்.

கதை- பல திரைப்படங்களில் பார்த்த கதை. நண்பன், அரசியல்வாதிகள் , ஏரியா, காதலி, சண்டை கிளைமாக்ஸ் அவ்வளவுதான்...

ஆனா அதை அப்படியே நேட்டிவிட்டியோடு அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். பல திரைப்படங்களில் வட சென்னையை ரௌடிகளை காட்டும் போது மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இதில் வடசென்னை கவுசின் போர்ட்லிலேயே படம் முழுவதையும் முடித்துவிடுகிறார்கள். நேட்டிவிட்டியே படத்தை பார்க்க தூண்டுகிறது.

கல்லையே நடிக்க வைத்தார் பாரதிராஜா... இரஞ்சித் ஒரு சுவரையே மெயின் கதாப்பாத்திரமாக நடிக்கவைத்திருக்கிறார்... இந்த சுவர்தான் கதையே

கார்த்தி - பல பல்புகளை வாங்கியபின் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். மற்ற படங்களை விட இதில் பருத்திவீரன் அளவிற்கு சிரத்தை எடுத்திருக்கிறார். ஆனால் சுட்டு போட்டாலும் இவருக்கு இந்த மெட்ராஸ் பாஸை வரமாட்டேங்குது... அதுக்கு சும்மாவே தமிழ் பேசியிருக்கலாம்... அந்த வெகுளித்தனமாக பல்லைக்காட்டுவதில் இவர் அண்ணை பார்க்க கடுப்பானாலும் இவருக்கு செட்டாகுது...
கமலுக்க பிறகு மெட்ராஸ் தமிழ் கரெக்டா செட்டாகி இருப்பது விஜய் சேதுபதிக்குதான் பல இடங்களில் ச்சே! விஜய் சேதுபதி பண்ணிருந்தா இந்த சீன் சூப்பாரா இருக்கும்னு என்று தோன்றுகிறது. படம் முழுவதும் இவர்தான் கதையை கொண்டு செல்கிறார் ஆனா அமர்ந்திருப்பவர்கள் இவருக்காக அமர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை...

அப்ப யாருக்கு படம்?

கலையரசன்- அன்பு என்ற கேரக்டரில் அவ்வளவு ஒரு இயல்பான நடிப்பு (இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த)... தனது ஆசாத்திய நடிப்பால் கார்த்தியை ஓரங்கட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்... வடசென்னை வாழ் இளைஞனை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார்... மௌனராகம் கார்த்திக், நீ வருவாய் என அஜித் போல் நல்ல கதாப்பாத்திரம் ...  கார்த்தியையும் பாராட்டியே ஆகவேண்டும் தன்னை விட ஆதிக ஸ்கோப் இந்த கேரக்கருக்குதான் என்று தெரிந்தும் நடிக்க சம்மதிதிருக்கிறார்...

அந்த கதாப்பாத்திரம் இல்லாமலே பார்வையாளர்கள் பிற்பாதி முழுவதும் அந்த காதாபாத்திரத்தை நினைவு கூறுவதிலும் சரி....படம் முடிந்து வெளியே வரும் போதும் அனைவரும் அன்பு கேரக்டர் பற்றிதான் பேசும் அளவிற்கு இயல்பான நடிப்பு ...

ஹீரோயின் கேத்தரின் தெரசா- எல்லாரும் அட இதுவா ஹீரொயின் என்னடா டம்மி ....... அப்படினு ஆரம்பத்தில் யோசித்தாலும் வடசென்னை வாழ் ஹீரோயின் என்பதற்கு சரியான தேர்வு நன்றாக நடித்திருக்கிறார்.... கார்த்தி மெட்ராஸ் தமிழும் நல்ல தமிழும் கலந்து டயலாக் பேசும்போது இந்த புள்ள கரெக்டா மெட்ராஸ் தமிழ் (டப்பிங் ஆர்டிஸ்டுக்கே இந்த பாராட்டு) பேசுறது ஏதோ கார்த்திய கலாய்கிறமாதிரி இருக்கு...

ஜானி- கார்த்தியை விட அன்பிற்கு அடுத்து கவனிக்கப்பட வைத்த கேரக்டர் ஜானி இவர் மாதிரி எல்லா ஊர்லயும் எல்லா ஏரியலவும் பெரும்பாலும் ஒருத்தர் இருப்பார் வெகு இயல்பாக செய்திருக்கிறார்...

கார்த்திக்கு அம்மா, அப்பா, பாட்டி, அன்புக்கு மனைவியா வர்ர புல்ல வில்லன் எல்லா கேரக்டரும் கரெக்கடா பொருந்தியிருக்காங்க கார்த்தியை தவிர கார்த்தியை பார்த்து பார்த்து அப்படியே பழகிடுறோம் அவ்வளவுதான்...

இசை இந்த படத்துக்கு இவ்வளவு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது.. ஆனால் இது போன்ற கதைகளுக்கு பின்னணி இசைதான் முக்கியம் இது போன்ற கதைகளுக்கு வில்லன் பைட் அப்படியே தெரிக்க விட் வேண்டாமா... அந்த சுவர காட்டும் போதே ஒரு பயம் வரும் அளவிற்கு இன்னும் முயன்றிருக்கலாம்.... பரவாயில்லை ....

நன்றிப்பா பாட்டுனதும் பாரின் போகலை...

கேமிராமேன் முரளி- வட சென்னை ஹவுசிங்க யூனிட் எல்லாம் அழகாக காட்டியிருக்கிறார்... ஒரு சீன்ல கார்த்திக் பின்னாடி அப்படியே நிழல் உயரமாகும் செம மாஸ் (ஆனா என்ன நிழல் இருக்க பக்கம் தான் லைட் இருக்கும் கேமரா பக்கம் இருட்டாதான் இருக்கும்)

கிளைமாக்ஸ் எப்படியாவது முடிக்கனும் வேற வழியில்ல சண்டக்கோழி, நான் மகான் அல்ல படங்கள் கைகொடுக்க ஒரு வழியாக வில்லனை கொன்று படத்தை முடித்துவிடுகிறார்... இது மட்டும் கொஞ்சம் சொதப்பல் ... வேற வழியும் இல்ல...

மெட்ராஸ்- வடசென்னை மாஸ்
 இயக்குனர் அட்டகத்தி இரஞ்சித்தின் அடுத்த வெற்றிக்கத்தி

3.8/5

Monday, July 21, 2014

சதுரங்க வேட்டை - இதற்கு முன் எத்தனையோ சினிமாக்களில் நாம் திருட்டை பற்றிபார்த்திருப்போம் அவை பிட்பாக்கெட், பீரோபுல்லிங், கொலை கொள்ளை போன்ற அடிக்கடி கேள்விப்பட்ட விசயங்களையும் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத நடந்திராக இன்டெலிஜென்ட் வகையென்று சொல்லப்படும் திருட்டுக்களையும் தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் இதுவரை யாரும் சொல்லத் துணியாத சொல்லாத திருட்டுவகைகளை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் இவை அன்றாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருட்டுகள்தான் சொல்லப்போனால் நம் நண்பரோ உறவினரோ இந்த திருட்டில் பாதிக்கப்பட்டிருப்பர். பலர் கௌரவத்தை காரணம் காட்டி இதை வெளியில் சொல்லாமலும் இருப்பர். மேலும் நமது மீடியாக்கள் இந்த வகையான திருட்டிற்கு வைத்திருக்கும் பெயர் மோசடி. கதைநாயகன் நட்ராஜ் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரக்டாின் தன்மை புாிந்து நடித்திருக்கிறார். மக்களை ஏமாற்ற அவர் செய்யும் ஒவ்வொரு மோசடி வேலைக்கும் நடிப்பில் ரசிகர்களிடம் சபாஷ் வாங்குகிறார். இளவரசு, பொன்வண்ணன், ஹீரோயின் உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் குறிப்பாக தூய தமிழ் பேசும் வில்லன் கவனிக்கசெய்கிறார். ஒளிபதிவு இசை என அனைத்தும் படத்திற்கு போதுமான அளவு செய்திருக்கிறார்கள். வைரமுத்துவின் வரிகள் அருமை "வெறித்தோடி போனது வாழ்க்கை” என்று ஒரு சிறு இடைவேளைக்கு பின் தத்துவ வாிகளை தந்திருக்கிறார்... திரைப்படத்தின் மெயின் ஹீரோ வசனம் ஒவ்வொரு வசனமும் தீப்பொறிதான்... மற்றும் நடைமுறை சமூகத்துடனும் ஒத்திருக்கிறது.. நெகடிவ்வான ஒரு கதைகளத்தை தேர்ந்தெடுத்து அதில் விரசமான பாடல்களோ சீன்களோ இல்லாமல் சொல்லப்போனால் ஹீரோ சண்டையேபோடாமல் ஹீரோயிசத்தையும் காட்டியிருக்கிறார். இயக்குனர். ஒவ்வொரு காட்சிகளிலும் இயக்குனரின் திறமையும் தெளிவும் தொிகிறது. முழுக்கமுழுக்க கதையின் மேல் நம்பிக்கை வைத்து ஜெயித்தும் இருக்கிறார்கள்.. இயக்குனருக்கு பாராட்டுகள்... குறையும் நிறையும்.. பிரபலமான ஹீரோ இல்லாததால்

July 21, 2014 at 10:03PM via Facebook

Saturday, July 19, 2014

வேலையில்லா பட்டதாாி தனுஷின் ஹீரோயிச வேலை

வேலையில்லா பட்டதாாி
--------------------------------------

முந்தைய படங்கள் அப்படி இப்படி வெற்றினு சொல்லி பெரும் டாலும் ஒரு நிலையான வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் தனுஷ் எல்லாதிரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்துவிடுவார் இதிலும் தவறவில்லை சிறப்பாக செய்திருக்கிறார். கதை தேர்விலும் சாி. அவருக்கு பொருத்தமான கதாபாத்திரம்.

சமுத்திரக்கனி எதிர்பார்க்காத கதாபாத்திரம் முதல் ஒன்றிரண்டு காட்சிகளில் அவரை தனுஷின் அப்பாவாக ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வது சிரமம் அடுத்தடுத்து தனது அழுத்தமான குரல்வளத்தால் அனைவரையும் கவருகிறார் மேலும் இவரது காதபாத்திரம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

சரண்யா பொன்வன்னன் இவங்கள விட்டா அம்மா கேரக்டர் செய்ய இப்ப ஆள் இல்லை. சொல்லப்போனால் மனோரமா ஆச்சிக்கு அடுத்து இவங்கதான்.

வேலையில்லாம வெட்டியாக சுற்றும் பசங்களை சினிமாவில் மட்டும் லைவ் பண்ற பக்கத்து வீட்டு பெண். தேவையான அளவு நடத்திருக்கிறார்.

டைரக்டர் ரொம்ப நல்லவர்போல இல்லை திருமணம் ஆகிவிட்டது என்ற மனிதாபிமானமானு தெரியவில்லை ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப ”நடித்துக்காட்ட” வாய்ப்பு வழங்கவில்லை.

அனிருத் இசை எப்பவும் போல படம் ஓடும் வரை ஹிட்.
நிச்சயம் இந்த பாடல்கள் தொடர்ந்த கேட்கமுடியாது...
அதேபோல் தனுஷே பெரும்பாலான பாடல்களை பாடியுள்ளார்.
நல்லாதான் இருக்கு. ஆனா தனுஷின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல...

அனிருத்தையும் அதிகப்படியான பாடல்களை தனுஷ் பாடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்...

கதைனு சொல்லலாம்னா மற்ற படங்களில் ஹீரோ உதாரியாக திரிவார் தம் அடிப்பார் தண்ணியடிப்பார். அப்பறம் திருந்திவிடுவார் படம் சுபம்னு முடியும்.

ஆனா இதில் ஹீரோ வெட்டியா சும்மா தண்ணி தம்முனு திரியறார். அம்மா இறப்பிற்கு பின் அம்மா தம் அடிக்க கூடாதுனு சொன்னாங்கனு சொல்றாா் சாி இதற்கு பிறகு சில தவறுகளை ஹீரோ திருத்திக்கொள்வார் என்று நினைத்தால் திரும்பவும் வாயில் சிகரட்டுடனே ஹீரோ திரிகிறார். ஒரு சில இடங்களில் ”சிகரெட் உடல்நலத்திற்கு தீங்கானது”னு ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்கு போடுறத கூட டைரக்டர் லேட்டா தான் போட்டிருக்கிறார்.

அப்ப இன்ஜினியாிங் படிச்சவன் இப்படி தண்ணி தம்முமாதான் திரிவானுக அப்படினு கடைசி வரை அதையே சொன்ன அந்த டைரக்டர்க்கு என் சார்பா ”பெரும் கண்டணம்”.

அப்பறம் இந்த தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தில் என்ன சொல்லவரானுகனே தெரியாம

அப்பாவை எதிர்த்து பேசும் போதும்
தண்ணி தம் அடிக்கும் போதும்
ஹீரோயின காட்டும் போதும் மட்டும்

கைதட்டல் விசில் அடிப்பவர்கள் அதில் வந்த ஒன்றிரண்டு நல்ல வசனங்களுக்கு சும்மாதான் உட்கார்ந்திருந்தாங்க... இவங்க உருப்படதாதவிட தனுஷ உருப்படியா ஒரு நல்ல படம் கொடுக்கவிடமாட்டாங்க..

காமெடி டைம்ஸ்
--------------------------
வசனங்களை பெரும்பாலும் ரஜினி மாடுலேசனில் பேசுவதும்
கிளைமாக்சில் சட்டைகழட்டி சண்டைபோடுவதும் (ஏற்கனவே படையப்பாலயே சிரிச்சாச்சிபா...)
தனுஷ்ரசிகர்களின் கைத்தட்களுக்கு நடுவே பலரின் சிரிப்பு சத்தங்களும் அடங்கும்...

என்ன விவேக் பத்தி சொல்லலனு நினைக்கறீங்களா அவரோட கேரக்டரும் அப்படிதான் நினைவில் நிற்காது அவ்வளவு வெயிட்டான கேரக்டர்.

வேலையில்ல பட்டாரி (படத்தின் டைரக்கர்) ஒருவருக்கு வேலை கொடுத்திருக்கும் படம்.

தனுஷ் ரசிகர்கள்னு யாரும் உட்காராத ஷோவா பார்த்து போன படம் பார்க்கலாம்...
தனுஷின் வெற்றி படங்கள் லிட்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

3/5