Showing posts with label aranthangi. Show all posts
Showing posts with label aranthangi. Show all posts

Monday, December 1, 2014

தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம்


தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம் பற்றி நிறைய விழப்புணர்வு விளம்பரங்களை தற்போது அரசு அதிகப்படுத்தியிருப்பது ஆரோக்யமான ஒன்றாக இருந்தாலும். தற்போதைய அரசு தூய்மை இந்தியா போன்ற பிரச்சாரங்களை முன்னிறுத்தி விடுகிறார்களே தவிர அதன் செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றி சரியாக விவரிப்பதில்லை. அதேபோல் பெரும்பாலும் அவசரகதியில் அனைத்தையும் செயல்படுத்துவதாக உள்ளது.
சாலையை சுத்தம் செய்வது என்பதை விட சாலைகளில் குப்பைகளை போடுவதை தவிர்ப்பதே சிறந்தது. அப்படியென்றால் குப்பைகளை எங்குபோடுவது அதற்கான வசதிகள் இருக்கிறதா?. ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என குப்பைத்தொட்டியை தேடினால் குப்பைத்தொட்டிகள் பெயரளவில் அதுவும் வெகு தூரங்களில் தான் வைக்கப்பட்டுள்ளது ஒருவர் தன் கையில் இருக்கும் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என நினைக்க வைக்கவே பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டியுள்ள நிலையில் அவரை குப்பைதொட்டி தேடி வெகு தூரம் செல்வதென்பது வாய்பில்லாத ஒன்று. குறைந்தது 100 அடிக்கு ஒரு குப்பைத்தொட்டி என நகர்புரங்களில் நிறுவுவது இந்த திட்டம் வெற்றியடைய 100 சதவீதம் உதவியாக இருக்கும். பிரபலங்களை தெரு கூட்டுவதுபோல் நடிக்க கூப்பிட்டு பயன்படுத்தாமல். பிரபலங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு நகரங்களாக குப்பைத்தொட்டிகளை ஸ்பான்சர் செய்யலாம்.
பிறகு திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது பற்றிய விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது. ஒருவர் சிறுநீர் கழிப்பதை கைத்தட்டி அவர் சிறுநீர் கழிக்காமல் தடுப்பது போல் அந்த விளம்பரம் இருக்கிறது. சரி நகர்புறங்களில் இருக்கும் ஒருவர் சிறுநீர் கழிக்கவேண்டுமால் எங்கு சென்று கழிக்க முடியும். உதாரணமாக நமது அறந்தை நகரத்தை எடுத்துக்கொண்டால் ஒருவர் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமானால் எங்கு செல்வார். அதற்கான வசதியை அரசு செய்து கொடுத்திருக்கிறதா. இங்கு இருக்கும் தொழில் நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை வசதி உள்ளதா.??? தொழில்நிறுவன கட்டிடங்கள் அனைத்திலும் கழிவறை கட்டாயமாக்கப்பட்டு அதை தரைத்தளத்தில் அனைவரும் பயன்படுத்தும் படி வைக்கவேண்டும். அதை தூய்மைபடுத்தும் பணியை அரசு ஏற்றுக்கொண்டால் பெயரளவிற்கு பொதுக்கழிவறை அமைக்க தேவையில்லை...

Tuesday, November 18, 2014

வட்டிக்கு வாங்குவது கொடுப்பதை விட ஷேர் டிரேட் ஆபத்தானது

வட்டிக்கு வாங்குவது கொடுப்பது பாவம் என்றும் எனவே ஷேர் டிரேட் செய்யலாம் என்றும் கூறுகிறார்கள்...
வட்டிக்கு விடுவது வாங்குவது எந்த வகையில் பாவம் என்று நினைக்கிறோமோ? அதை விட பாவமானது ஷேர் டிரேடிங். வட்டிக்கு விட்டாலாவது ஒருவர் ஒரு தொழிலில் முதலீடு செய்து அந்த முதலீட்டு லாபத்தை வட்டியாக கொடுப்பார்.
ஆனால் ஷேர் டிரேடில் உங்களுக்கு இலாபம் வந்தது என்றால் எங்கோ ஒருவர் தன் முதலீடை(பணத்தை) ஏமார்ந்திருக்கிறார்.
ஷேர் டிரேடில் எந்த ஒரு உற்பத்தியும் நடைபெறவில்லை என்பதே உண்மை.
ஷேர் என்ற சரியான வியாபார உத்தியை நோகாமல் பணம் பெற வேண்டும் என்ற பொருளாதார மேதைகள் ஷேர் டிரோடாக மாற்றி வளர்ச்சி என்பதையே ஷேர் என்று நினைக்கும் வகையில் மக்களை நம்பவைத்துவிட்டனர்.
உற்பத்தியையே ஆணிவேராக கொண்ட நமது நாட்டின் பொருளாதார சூழலுக்கு ஒரு போதும் உதவாது இந்த ஷேர் டிரேட்

Sunday, November 2, 2014

குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்

ஒரு குழந்தை அம்மாவைப்பார்த்து முதல் முதலாக எனக்கு எழுத சொல்லிக்கொடுனு சொன்னான் உடனே அவங்களும் ஒரு நோட் பேனாவ எடுத்து எழுத சொல்லிக்கொடுக்க உட்கார்ந்தாங்க ...
ஆனா அவங்க முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுத்த எழுத்து 'A` ...
முதன் முதலாக எழுத சொல்லிக்கொடுக்கும் போது ‘அ‘ னு தாய்மொழில ஆரம்பித்தால் தான் என்ன...
அதே போல் தற்போதைய நவநாகரீக அம்மாக்கள் குழந்தைகள் டாடி , மம்மி என்று தான் கூப்பிட வேண்டும் என்று நினைப்பதோடு குழந்தைகளையும் அப்படியே கூப்பிடவும் பழக்கிவிடுகிறார்கள்...
அம்மா அப்பா என்று தமிழில் கூப்பிடுவது கவுரவ குறைச்சலாகவும் அவமானமாகவும் தோன்றுமானால்... அவர்கள் அவர்களது அம்மா அப்பாவை தமிழில் தான் கூப்பிடுகிறார்கள்.
அப்படி என்றால் அவர்கள் அம்மா அப்பாவை தினமும் தமிழில் கூப்பிட்டு அவர்களை அவமானப்படுத்துகிறார்களா???
ஏன் இந்த போலி சந்தோசம்
எப்படி குழந்தைகள் முதன் முதலாக பேசும் போது அம்மாவையும் அப்பாவையும் தான் கூப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறீர்களோ...
அதை அவர்கள் தமிழில் கூப்பிடுவதுதான் சிறப்பு...
குழந்தைகள் உறவுகளை தமிழிலேயே கூப்பிட பழக்குங்கள் அதுவே தமிழுக்கு கவுரவம் என்பதைவிட நமக்கு அது தான் கவுரவம்..

Saturday, October 25, 2014

கத்தி




கத்தி

எதிர்பார்ப்புடனும் எதிர்ப்புடனும் விஜய் முருகதாஸ் கூட்டணில் வெளிவந்திருக்கும் படம். படம் எப்படி வெளிய வந்தது என்பதை எந்த படத்திலும் காட்டாத ஒரு டிவி சேனலை காட்டி புரியவைத்திருக்கிறார்கள்

விஜய்- 
முதன் முதலாக சரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய், இதுவரை விஜயை இயக்கிய இயக்குனர்கள் விஜயை அழகாய் பார்த்தார்கள் முருகதாஸ் மட்டுமே அவரை சரியான கதைக்களத்தில் வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

மாஸ், ஹீரோயிசம் என்பதை விஜய்க்கு சரியாக புரியவைத்திருக்கிறார் இயக்குனர். சொல்லப்போனால் விஜய்க்கு சரியான பாதையை துப்பாக்கி முதல் அமைத்துக்கொடுத்துவிட்டார் முருகதாஸ் என்றே சொல்ல வேண்டும்.

விஜய்க்கு சரியான கதை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன் முதலாக கை தட்டி பாராட்டும் அளவிற்கு நடித்திருக்கிறார் விஜய். கண்டிப்பா ஒரு விருது கொடுத்து பாராட்ட வேண்டும்.

சமந்தா-
படத்தின் ஹீரோயின் அவ்வளவுதான் சொல்றதுக்கு வேற எதும் இல்லை. அஞ்சான் அளவிற்கு நடத்துக்காட்டலைனுதான் சொல்லனும்….

கதை மற்றும் முருகதாஸ்-
லாஜிக் ஓட்டைகள் பல இருந்தாலும் அப்படிலாம் இல்லைனா டாக்குமெண்ட்ரி படமாதிரி இருக்குனு இந்த வாய்தான் சொல்லும். சமூகத்தில் ஒரு முக்கியமான பிரச்சனை யாரும் கண்டுகொள்ளாத பிரச்சனை, தூள், தண்ணீர் தண்ணீர் போன்ற படங்களில் ஏற்கனவே கையாண்ட கதைக்களம்தான் என்றாலும் ஒரு சமூகப்பிரச்சனையை ரசிக்கும் அளவு பல திருப்பங்களுடன் முருகதாஸ் தனக்கான ஸ்டைலில் சொல்லி பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

முருகதாஸின் ஸ்டைலில் முக்கியமானது கடைசிகட்ட காட்சிகளில் அனைவரையும் சீட்டின் நுனியில் உடகார வைத்து விடுவார். இதில் அனிரூத்தின் சொதப்பல் பின்னணி இசையையும் மீறி அந்த ஏரி குழாய் போராட்டத்தில் ஹைய் டெம்பர்ல போய்டே இருக்கிறார் இயக்குனர்… அப்புறம் வயதானவங்களை எல்லாம் பயன்படுத்தியது இயக்குனரின் சமுதாய பார்வைக்கு ஒரு சான்று.. ஒரு சில சீன்ல நிமிர்ந்து நில் நினைவுக்கு வந்தது….

வசனம்-
கத்திப்படத்தின் கத்தி வசனம்தான் ஷார்ப்பான வசனங்கள் அனைவரையும் சிந்திக்க தூண்டும் வசனங்கள் படத்தின் அடுத்த ஹீரோ. விஜய் பிரஸ்மீட்ல பேசும் போது ஒவ்வொரு வசனமும் செம மாஸ்… கை தட்டல் பரக்கும் காட்சிகள் அது. அதில் எல்லா பிரச்சனையையும் பேசும் போது மீத்தேன் பற்றி சொல்லுவாய் வாய்ப்பிருந்தால் நண்பர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மீடியாக்களை கேட்கும் கேள்விகள் நருக் சுருக்… அந்த சீன்ல வருவது நம் ஊர் கரார்னு நினைக்கிறேன். Aranthai KRajagopal

வில்லன் நீல் நிதின் முகேஷ்-
நிறையபேருக்கு இவர் யாருனே தெரியல இவர் வெளிநாட்டுகாரர்லாம் இல்ல இந்தியாதான் பாலிவுட்ல ஒரு குறிப்பிடத்தக்க ஹீரோ குழந்தை நட்சத்திரம் முதல் நடித்துக்கொண்டிருப்பவர். விக்ரமோட டேவிட் படத்திலும் நடித்திருக்கிறார். வில்லத்தன எக்ஸ்விரசன்லாம் சூப்பர் ஆனா இவருக்கு வாய்ப்பில்லை… வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வில்லக்கதாபாத்திரம் போலவே டம்மியாக்கப்பட்ட கதாபாத்திரம்

கேமராமேன்- வில்லியம்ஸ்
இவரு ராஜா ராணி கேமரா மேன்தானானு சந்தேகமாக இருக்கிறது. சொதப்பல்களில் கேமிராவும் ஒன்ற பாடல்களில் சரியாக கேமராவை கையாண்டவர் கதைக்களத்தில் தவற விட்டிருக்கிறார். ஒரு கிராமத்தையம் அவர்களின் வறட்சியையும் கேமராவில் சரியாக கையாளவில்லை.

மேலும் விஜய் தனியா எந்த ஹீரோயிசமும் செய்ய வாய்ப்பில்லை. அவரோட எக்ஸ்பிரசனதான் மாஸா காட்டியாகனும் சொல்லப்போனால் விஜயை அழகாக காட்டியவர் கேமிராவால் ஒரு மாஸ் கிரியேட் பண்ண தெரியலைனுதான் சொல்லனும்.

இன்டர்வல் சீன் இதே சீன் துப்பாக்கிலையும் வரும் இரண்டிலும் ஒரே டயலாக்தான் துப்பாக்கில டயலாக்க சொல்லி முடிச்சதும் விஜயையோட கண் ஒரு ஷார்ப்பா காட்டி ஒரு பக்கம் ஷேடோ விழுந்தமாதிரி காட்டியிருப்பார் சந்தோஷ்சிவன் செம மாஸ் சீன். ஆனா இதுல அதே சீனா சும்மா லோ ஆங்கிள்ல எடுத்து ஒரு விறுவிறுப்பே இல்லாம இருக்கும்….

அதேபோல் விஜய் குழாய்யிலிருந்து மேலே எழும்பொழுதும் ஒரு டெம்பர் இல்லை.

குழாயில் தலைகீழாக ரொடேட் செய்து விஜய் குளோசப்பில் செல்லும் காட்சியில் இவர் திறமையை காட்டியிருக்கிறார். எங்கோ காப்பியடிக்கப்பட்டதாக இருந்தாலும் நல்லா இருந்தது.

அனிரூத்-

திரைப்படத்தில் பெரிய பிளஸ்ஸாக நினைக்கப்பட்டவர். டிரைலர் தீம் மீயுசிக்கால் எதிபார்ப்பை ஏற்படுத்தியவர். படத்தின் பெரிய மைனஸ் இவர்தான். விஜயின் மொக்கை படங்களிலும் அவரில் ஆல்பங்கள் சூப்பரா இருக்கும். விஜய் படங்களில் மொக்கை ஆல்பம் இதுவாகதான் இருக்கும். செல்பிபுல்ல பாடல் மட்டுமே விஜயின் குரலில் நன்றாக உள்ளது… அதற்கு அடுத்து மனதில் நிற்கும் பாட்டு “யாரு பெத்த புள்ளையோ”. விஜய் படத்தில் ஓபனிங்க சாங் அட்லீஸ்ட் கேட்டிருக்கியா இல்லையா அனிரூத் … இதில் ஓபனிங்சாங் அத கேட்டதவிட பார்க்கும் போது ரொம்ப கடுப்பா இருக்குயா…

பின்னணி இசைனா என்னனு கேட்கற அளவிற்கு இசையமைத்து எரிச்சலடைய செய்திருக்கிறார். காப்பியடிச்சாலும் தேவா சூப்பரா போடுவாருப்பா பாட்சா படத்தயாவது பாருயா…

எப்ப பார்த்தாலும் அந்த தீம் மீயுசிக்கயே பயன்படுத்துகிறார்… அது 2மேப் சீன,; குழாய் சீன்;களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

சூப்பர் கான்செப்டான அந்த காசு சுண்டிவிடுற சண்டைக்காட்சியின் விறுவிறுப்பையே தனது பின்னணி இசையால் குறைத்து விடுகிறார். சண்டைக்காட்சிகளில் ஏன்யா பின்னணி இசை ஹாலிவுட் படத்திலயே சேசிங் சீன்ஸ்ல மட்டும்தான்யா போடுவானுக.

தமிழ்நாடே ஹீரோ குழாயிலிருந்து வெளிய வருவதை எதிர்பார்த்திட்டிருக்காங்க வில்லன் அவன் வெளிய வரமாட்டானு இருக்கான் வெளிய தலைய காட்டும்போது உன் மியுசிக்லயே நீ அப்படியே டாப் கியர போட்டு தூக்கியிருக்க வேண்டாமா. அட போயா… வேலையில்ல பட்டதாரில நல்லா தனயா பண்ணிருந்த…. ரொம்ப நல்லா பண்றேன்னு கோட்ட விட்டுட்டியோ…

அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்து ஒரு முக்கியமான பிரச்சனையை மாஸ் ஹீரோவைக் கொண்டு சரியாக கையாண்டு மிக்பெரிய வெற்றியையும் முருகதாஸ் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்….

எம்என்சி கம்பெனி வந்து எல்லா விளைநிலங்களையும் ஆக்கிரமிக்கிறது என்பது உண்மைதான்… எங்க ஊர்லையும் விளைநிலங்கலெல்லாம் காணவில்லை ஆனா எம்என்சி கம்பெனியும் இல்லை…

சமூப்பிரச்சனைக்காக அதிகமாக சத்தம் போட்டு நம்மை குத்திக்காட்டிவிட்டும் சென்றிருக்கிறது

கத்தி – கூர்மை

4/5

Tuesday, September 30, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்
-----------------------------------------------
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அட இவ்வளவு எளிமையா ரசிக்கும் படி ஒரு படம் எடுக்கமுடியுமா என ரசிக்க வைத்த இயக்குனர் இரஞ்சித்தின் அடுத்த படம்.

கதை- பல திரைப்படங்களில் பார்த்த கதை. நண்பன், அரசியல்வாதிகள் , ஏரியா, காதலி, சண்டை கிளைமாக்ஸ் அவ்வளவுதான்...

ஆனா அதை அப்படியே நேட்டிவிட்டியோடு அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். பல திரைப்படங்களில் வட சென்னையை ரௌடிகளை காட்டும் போது மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இதில் வடசென்னை கவுசின் போர்ட்லிலேயே படம் முழுவதையும் முடித்துவிடுகிறார்கள். நேட்டிவிட்டியே படத்தை பார்க்க தூண்டுகிறது.

கல்லையே நடிக்க வைத்தார் பாரதிராஜா... இரஞ்சித் ஒரு சுவரையே மெயின் கதாப்பாத்திரமாக நடிக்கவைத்திருக்கிறார்... இந்த சுவர்தான் கதையே

கார்த்தி - பல பல்புகளை வாங்கியபின் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். மற்ற படங்களை விட இதில் பருத்திவீரன் அளவிற்கு சிரத்தை எடுத்திருக்கிறார். ஆனால் சுட்டு போட்டாலும் இவருக்கு இந்த மெட்ராஸ் பாஸை வரமாட்டேங்குது... அதுக்கு சும்மாவே தமிழ் பேசியிருக்கலாம்... அந்த வெகுளித்தனமாக பல்லைக்காட்டுவதில் இவர் அண்ணை பார்க்க கடுப்பானாலும் இவருக்கு செட்டாகுது...
கமலுக்க பிறகு மெட்ராஸ் தமிழ் கரெக்டா செட்டாகி இருப்பது விஜய் சேதுபதிக்குதான் பல இடங்களில் ச்சே! விஜய் சேதுபதி பண்ணிருந்தா இந்த சீன் சூப்பாரா இருக்கும்னு என்று தோன்றுகிறது. படம் முழுவதும் இவர்தான் கதையை கொண்டு செல்கிறார் ஆனா அமர்ந்திருப்பவர்கள் இவருக்காக அமர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை...

அப்ப யாருக்கு படம்?

கலையரசன்- அன்பு என்ற கேரக்டரில் அவ்வளவு ஒரு இயல்பான நடிப்பு (இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த)... தனது ஆசாத்திய நடிப்பால் கார்த்தியை ஓரங்கட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்... வடசென்னை வாழ் இளைஞனை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார்... மௌனராகம் கார்த்திக், நீ வருவாய் என அஜித் போல் நல்ல கதாப்பாத்திரம் ...  கார்த்தியையும் பாராட்டியே ஆகவேண்டும் தன்னை விட ஆதிக ஸ்கோப் இந்த கேரக்கருக்குதான் என்று தெரிந்தும் நடிக்க சம்மதிதிருக்கிறார்...

அந்த கதாப்பாத்திரம் இல்லாமலே பார்வையாளர்கள் பிற்பாதி முழுவதும் அந்த காதாபாத்திரத்தை நினைவு கூறுவதிலும் சரி....படம் முடிந்து வெளியே வரும் போதும் அனைவரும் அன்பு கேரக்டர் பற்றிதான் பேசும் அளவிற்கு இயல்பான நடிப்பு ...

ஹீரோயின் கேத்தரின் தெரசா- எல்லாரும் அட இதுவா ஹீரொயின் என்னடா டம்மி ....... அப்படினு ஆரம்பத்தில் யோசித்தாலும் வடசென்னை வாழ் ஹீரோயின் என்பதற்கு சரியான தேர்வு நன்றாக நடித்திருக்கிறார்.... கார்த்தி மெட்ராஸ் தமிழும் நல்ல தமிழும் கலந்து டயலாக் பேசும்போது இந்த புள்ள கரெக்டா மெட்ராஸ் தமிழ் (டப்பிங் ஆர்டிஸ்டுக்கே இந்த பாராட்டு) பேசுறது ஏதோ கார்த்திய கலாய்கிறமாதிரி இருக்கு...

ஜானி- கார்த்தியை விட அன்பிற்கு அடுத்து கவனிக்கப்பட வைத்த கேரக்டர் ஜானி இவர் மாதிரி எல்லா ஊர்லயும் எல்லா ஏரியலவும் பெரும்பாலும் ஒருத்தர் இருப்பார் வெகு இயல்பாக செய்திருக்கிறார்...

கார்த்திக்கு அம்மா, அப்பா, பாட்டி, அன்புக்கு மனைவியா வர்ர புல்ல வில்லன் எல்லா கேரக்டரும் கரெக்கடா பொருந்தியிருக்காங்க கார்த்தியை தவிர கார்த்தியை பார்த்து பார்த்து அப்படியே பழகிடுறோம் அவ்வளவுதான்...

இசை இந்த படத்துக்கு இவ்வளவு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது.. ஆனால் இது போன்ற கதைகளுக்கு பின்னணி இசைதான் முக்கியம் இது போன்ற கதைகளுக்கு வில்லன் பைட் அப்படியே தெரிக்க விட் வேண்டாமா... அந்த சுவர காட்டும் போதே ஒரு பயம் வரும் அளவிற்கு இன்னும் முயன்றிருக்கலாம்.... பரவாயில்லை ....

நன்றிப்பா பாட்டுனதும் பாரின் போகலை...

கேமிராமேன் முரளி- வட சென்னை ஹவுசிங்க யூனிட் எல்லாம் அழகாக காட்டியிருக்கிறார்... ஒரு சீன்ல கார்த்திக் பின்னாடி அப்படியே நிழல் உயரமாகும் செம மாஸ் (ஆனா என்ன நிழல் இருக்க பக்கம் தான் லைட் இருக்கும் கேமரா பக்கம் இருட்டாதான் இருக்கும்)

கிளைமாக்ஸ் எப்படியாவது முடிக்கனும் வேற வழியில்ல சண்டக்கோழி, நான் மகான் அல்ல படங்கள் கைகொடுக்க ஒரு வழியாக வில்லனை கொன்று படத்தை முடித்துவிடுகிறார்... இது மட்டும் கொஞ்சம் சொதப்பல் ... வேற வழியும் இல்ல...

மெட்ராஸ்- வடசென்னை மாஸ்
 இயக்குனர் அட்டகத்தி இரஞ்சித்தின் அடுத்த வெற்றிக்கத்தி

3.8/5

Monday, July 21, 2014

சதுரங்க வேட்டை - இதற்கு முன் எத்தனையோ சினிமாக்களில் நாம் திருட்டை பற்றிபார்த்திருப்போம் அவை பிட்பாக்கெட், பீரோபுல்லிங், கொலை கொள்ளை போன்ற அடிக்கடி கேள்விப்பட்ட விசயங்களையும் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத நடந்திராக இன்டெலிஜென்ட் வகையென்று சொல்லப்படும் திருட்டுக்களையும் தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் இதுவரை யாரும் சொல்லத் துணியாத சொல்லாத திருட்டுவகைகளை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் இவை அன்றாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருட்டுகள்தான் சொல்லப்போனால் நம் நண்பரோ உறவினரோ இந்த திருட்டில் பாதிக்கப்பட்டிருப்பர். பலர் கௌரவத்தை காரணம் காட்டி இதை வெளியில் சொல்லாமலும் இருப்பர். மேலும் நமது மீடியாக்கள் இந்த வகையான திருட்டிற்கு வைத்திருக்கும் பெயர் மோசடி. கதைநாயகன் நட்ராஜ் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரக்டாின் தன்மை புாிந்து நடித்திருக்கிறார். மக்களை ஏமாற்ற அவர் செய்யும் ஒவ்வொரு மோசடி வேலைக்கும் நடிப்பில் ரசிகர்களிடம் சபாஷ் வாங்குகிறார். இளவரசு, பொன்வண்ணன், ஹீரோயின் உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் குறிப்பாக தூய தமிழ் பேசும் வில்லன் கவனிக்கசெய்கிறார். ஒளிபதிவு இசை என அனைத்தும் படத்திற்கு போதுமான அளவு செய்திருக்கிறார்கள். வைரமுத்துவின் வரிகள் அருமை "வெறித்தோடி போனது வாழ்க்கை” என்று ஒரு சிறு இடைவேளைக்கு பின் தத்துவ வாிகளை தந்திருக்கிறார்... திரைப்படத்தின் மெயின் ஹீரோ வசனம் ஒவ்வொரு வசனமும் தீப்பொறிதான்... மற்றும் நடைமுறை சமூகத்துடனும் ஒத்திருக்கிறது.. நெகடிவ்வான ஒரு கதைகளத்தை தேர்ந்தெடுத்து அதில் விரசமான பாடல்களோ சீன்களோ இல்லாமல் சொல்லப்போனால் ஹீரோ சண்டையேபோடாமல் ஹீரோயிசத்தையும் காட்டியிருக்கிறார். இயக்குனர். ஒவ்வொரு காட்சிகளிலும் இயக்குனரின் திறமையும் தெளிவும் தொிகிறது. முழுக்கமுழுக்க கதையின் மேல் நம்பிக்கை வைத்து ஜெயித்தும் இருக்கிறார்கள்.. இயக்குனருக்கு பாராட்டுகள்... குறையும் நிறையும்.. பிரபலமான ஹீரோ இல்லாததால்

July 21, 2014 at 10:03PM via Facebook

Monday, April 28, 2014

டாடி மம்மி

விருந்தாளிகளை
அப்பா அம்மா
என்று அழைக்கச்
சொல்கிறார்கள்...
கலாச்சார சீரழிவு ...
-டாடி மம்மி

Sunday, April 27, 2014

தொண்டைமான் - கடைசி தமிழ் மன்னன்

தொண்டைமான் - கடைசி தமிழ் மன்னன்


கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்

பல்லவர்

இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.

[தொகு]சோழர் ஆட்சியில் தொண்டைமான்


பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. , கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாலியும் புத்திசாலியும் கூட. ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள். கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மணம் முடித்து வைக்கிறார்.

[தொகு]அறந்தாங்கி தொண்டைமான்


அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். .[1]]]

[தொகு]புதுக்கோட்டை தொண்டைமான்

தோட்டி முதல் தொண்டைமான் வரையில் என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை. ‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன். என்பது விளக்கும்.

ஆவடை ரகுநாத தொண்டைமான்

ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்

இரகுநாத தொண்டைமான் - 1686 - 1730

புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இவரது தங்கை காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் மனைவி ஆவார்.கலசமங்கலம், திருமயம், பகுதிகளை சேதுபதி இவருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது

விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769

இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர்.

இராயரகுநாத தொண்டைமான்(1769 – 1789)

ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர்(1789 – 1807)

இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 6 (1807 – 1825)

ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் 7 (1825 – 1839)

இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர். இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர்.

ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)

இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்

ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார். இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . இவர்1997இல் மறைந்தார். ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்

[]தொண்டைமான் கட்டிய கோவில்கள்


திருப்பதி

திருப்பதி, ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது திருமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருமலையில் விஷ்ணுவுக்காக அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இக் கோயிலே திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம். ஏழுமலை என்று அழைக்கப்படும் இம் மலையில் அமைந்துள்ள இக் கோயில் தமிழ் தொண்டைமானால் கட்டப்பட்டது.

மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.


நன்றி விக்கிபீடியா

Friday, April 25, 2014

100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

இந்த தலைப்பை வைத்துக்கொண்டு தான் இன்னும் சில நாட்களுக்கு இந்த ஊடங்கள் Manushya Puthiran போன்ற நடுநிலைவாதிகள்(அது ஒரு காலம்) என்று சொல்லியும் ஒரு நான்கு கட்சி பிரமுகர்களை வைத்துக்கொண்டும் மக்கள் மேல் குற்றம் சாட்டி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள்...

இந்த அரசியல் வாதிகளும் படித்தவர்களுக்கு நாட்டின் மேல் அக்கரை இல்லை சிலர் நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு தேர்தலை புறக்கணித்து ஜனநாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் பொருப்பில்லாதவர்கள் என்று இந்த ஜனநாயக பாதுகாவலர்களும் அப்பாவிகளை குறை சொல்லிவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் பேசிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்...

வெறும் தென் , மத்திய சென்னை, கன்னியாகுமரியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களை குறை கூறுவது முட்டாள் தனம்...

யாருக்கு பொருப்பில்லை வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து வரும் வாக்களார்களும் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்( பாருக் முகம்மது) என்பதற்கு உதாரணங்களும் இருக்கிறார்கள்..

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது கூட தெரியாது ஆனாலும் நான் எனது ஜனநாயக கடமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று இந்த வெயிலிலும் வாயதான முதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் வந்து வாக்களித்தனர்..

நாமக்கே குழப்பம் வரலாம் யாரைக்கேட்டாலும் ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள் பிறகு எப்படி வாக்கு சதவீதம் குறைகிறது என்று...

இந்த குறைகளுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையத்திற்கென்று தனி அலுவலர்கள் இல்லாததும்.. மேலும் இன்னும் வாக்காளர்கள் சரிபார்த்தலில் குழறுபடிகள் இருப்பதுமே காரணம்
..
உதாரணமாக எங்கள் பகுதியில் 1405 வாக்காளர்கள்

இதில் சுமார் 15 சதவீதத்தினர் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள்
(குறிப்பு அவர்கள் வெளிநாட்டில் வசிக்க செல்லவில்லை)

இறந்தவர்கள் சுமார் 0.8 சதவீதம் ... வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் ஒரு 10 சதவீதம் பேர் இருக்கிறார்கள்...

எனக்கு தெரிந்து ஒரு 5 சதவீதம் பேர் வேண்டுமானல் எதற்கு ஓட்டெல்லாம் போட என்று மெத்தனமாக இருக்கலாம்...

எங்கள் பகுதியில் சுமார் 95 சதவீத வாக்குபதிவு என்றே நான் சொல்வேன் (கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா இருக்கும்)..

வாக்களிக்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்காதவர்களே அதிகம்...
பாரூக் முஹம்மது பாய் போல் அனைவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது இயலாத காரியம்...

அதிலும் அவர்கள் ஒன்றும் வருடத்தில் 365 நாட்களுக்கு 180 நாட்களை வேலைநாட்களாக கொண்டும்... எலெக்சன் மற்றும் கணக்கெடுப்பு போன்ற நாட்டிற்கான வேலை வந்தவுடன் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு ஓடி ஒழிந்து கொள்ளும் ஆசிரியர் வேலை பார்க்கவில்லை...

ஒரு இந்தியனுக்கு தனக்கான வருமாத்திற்கான வழிவகையை செய்து கொடுக்க இந்த அரசுகளுக்கு வக்கில்லாததால் தான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் பிழைப்பிற்காக..

அவர்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உரிமையை நிலைநாட்ட ஆசையிருக்கத்தான் செய்யும் ...

அவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுக்காதது இந்த அரசுகளின் கையாளாகாத தனம் ...
அதைவிட்டு அவர்கள் உழைத்து கொண்டுவரும் வருமானத்தில் வரிஎன்று கொள்ளையடிப்பதை மட்டும் இந்த அரசு லாபகமாக செய்கிறது....

அடுத்து வெளிஊர்களில் வேலை செய்பவர்கள் அவர்களும் இந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலதான் இந்த ஒரு நாள் விடுமுறையில் சென்னையில வேலை செய்யும் கன்னியாகுமரி வாக்காளர் எப்படி வாக்களிக்க முடியும்....
இதில் சிலர் வெளிமாநிலங்களிலும் வேலை செய்கிறார்கள்

அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பினை இந்த அரசாங்கமோ ஆணையமோ ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்கள் மேல் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்...

சும்மா டிவில பேசுறோம்னு எதையாவது பேசாதீங்கயா....

#வாக்களிக்க_வாய்ப்பு_கிடைக்காத_நண்பர்களுக்கு_சமர்ப்பணம்

---
#கபார்கான்_அறந்தாங்கியான்


Photo: 100% வாக்குப்பதிவை அடையமுயாதது ஏன்??

இந்த தலைப்பை வைத்துக்கொண்டு தான் இன்னும் சில நாட்களுக்கு இந்த ஊடங்கள் Manushya Puthiran போன்ற நடுநிலைவாதிகள்(அது ஒரு காலம்) என்று சொல்லியும் ஒரு நான்கு கட்சி பிரமுகர்களை வைத்துக்கொண்டும் மக்கள் மேல் குற்றம் சாட்டி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள்...

இந்த அரசியல் வாதிகளும் படித்தவர்களுக்கு நாட்டின் மேல் அக்கரை இல்லை சிலர் நடுநிலைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு தேர்தலை புறக்கணித்து ஜனநாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் பொருப்பில்லாதவர்கள் என்று இந்த ஜனநாயக பாதுகாவலர்களும் அப்பாவிகளை குறை சொல்லிவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் பேசிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்...

வெறும் தென் , மத்திய சென்னை, கன்னியாகுமரியை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களை குறை கூறுவது முட்டாள் தனம்...

யாருக்கு பொருப்பில்லை வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து வரும் வாக்களார்களும் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்( பாருக் முகம்மது) என்பதற்கு உதாரணங்களும் இருக்கிறார்கள்..

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது கூட தெரியாது ஆனாலும் நான் எனது ஜனநாயக கடமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று இந்த வெயிலிலும் வாயதான முதியவர்கள்  பெரும்பான்மையானவர்கள் வந்து வாக்களித்தனர்.. 

நாமக்கே குழப்பம் வரலாம் யாரைக்கேட்டாலும் ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள் பிறகு எப்படி வாக்கு சதவீதம் குறைகிறது என்று...

இந்த குறைகளுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையத்திற்கென்று தனி அலுவலர்கள் இல்லாததும்.. மேலும் இன்னும் வாக்காளர்கள் சரிபார்த்தலில் குழறுபடிகள் இருப்பதுமே காரணம்
..
உதாரணமாக எங்கள் பகுதியில் 1405 வாக்காளர்கள்

இதில் சுமார் 15 சதவீதத்தினர் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள் 
(குறிப்பு அவர்கள் வெளிநாட்டில் வசிக்க செல்லவில்லை) 

இறந்தவர்கள் சுமார் 0.8 சதவீதம் ... வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் ஒரு 10 சதவீதம் பேர் இருக்கிறார்கள்...

எனக்கு தெரிந்து ஒரு 5 சதவீதம் பேர் வேண்டுமானல் எதற்கு ஓட்டெல்லாம் போட என்று மெத்தனமாக இருக்கலாம்...

எங்கள் பகுதியில் சுமார் 95 சதவீத வாக்குபதிவு என்றே நான் சொல்வேன் (கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா இருக்கும்)..

வாக்களிக்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்காதவர்களே அதிகம்... 
பாரூக் முஹம்மது பாய் போல் அனைவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது இயலாத காரியம்...

அதிலும்  அவர்கள் ஒன்றும் வருடத்தில் 365 நாட்களுக்கு 180 நாட்களை வேலைநாட்களாக கொண்டும்... எலெக்சன் மற்றும் கணக்கெடுப்பு போன்ற நாட்டிற்கான வேலை வந்தவுடன் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு ஓடி ஒழிந்து கொள்ளும் ஆசிரியர் வேலை பார்க்கவில்லை...

ஒரு இந்தியனுக்கு தனக்கான வருமாத்திற்கான வழிவகையை செய்து கொடுக்க இந்த அரசுகளுக்கு வக்கில்லாததால் தான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் பிழைப்பிற்காக..

அவர்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உரிமையை நிலைநாட்ட ஆசையிருக்கத்தான் செய்யும் ... 

அவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுக்காதது இந்த அரசுகளின் கையாளாகாத தனம் ... 
அதைவிட்டு அவர்கள் உழைத்து கொண்டுவரும் வருமானத்தில் வரிஎன்று கொள்ளையடிப்பதை மட்டும் இந்த அரசு லாபகமாக செய்கிறது....

அடுத்து வெளிஊர்களில் வேலை செய்பவர்கள் அவர்களும் இந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலதான் இந்த ஒரு நாள் விடுமுறையில் சென்னையில வேலை செய்யும் கன்னியாகுமரி வாக்காளர் எப்படி வாக்களிக்க முடியும்....
இதில் சிலர் வெளிமாநிலங்களிலும் வேலை செய்கிறார்கள் 

அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பினை இந்த அரசாங்கமோ ஆணையமோ ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்கள் மேல் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்... 

சும்மா டிவில பேசுறோம்னு எதையாவது பேசாதீங்கயா.... 

#வாக்களிக்க_வாய்ப்பு_கிடைக்காத_நண்பர்களுக்கு_சமர்ப்பணம்

---
#கபார்கான்_அறந்தாங்கியான்