http://scan.tndge.in/
Monday, June 4, 2018
Saturday, June 2, 2018
+2 & 10th Mark Sheet download
Wednesday, May 16, 2018
தமிழக கல்லூரிகளில் விண்ணப்பிக்க இணையதளங்கள்
Women's Christian College (WCC)
Queen Mary's College, Chennai
Ramakrishna Mission Vidyapith (off line only)
S.I.E.T. College for Women (jbas Muslim college)
Guru Nanak College
Presidency College
Meenakshi College for Women
Bharathi Womens College (Autonomous)
Chellammal Women's College
12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் கவனத்திற்கு
12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் கவனத்திற்கு
----------------------------------------
பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 21-ம் தேதி பிற்பகல் முதல் பள்ளி பெற்றுக் கொள்ளலாம். அல்லது http://www.dge.tn.nic.in/ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
“விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள்தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் 17-ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் , மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணமாக பகுதி 1 மொழிப் பாடத்திற்கு ரூ.550ம், பகுதி 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550ம், ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275ம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.
-
அறந்தாங்கியான்
பாரடைஸ் இ-சா்வீசஸ்
9443316661
Sunday, October 11, 2015
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்
--------------------------------------------------------------------
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நடிகர்களின் கோரிக்கை மற்றும் அவரது ரசிகர்களின் கோரிக்கை அதுவும் அரசு கட்டித்தர வேண்டுமாம்.
--------------------------------------------------------------------
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நடிகர்களின் கோரிக்கை மற்றும் அவரது ரசிகர்களின் கோரிக்கை அதுவும் அரசு கட்டித்தர வேண்டுமாம்.
அவரு நடித்த படத்தை காசு கொடுத்து நம்ம தாத்தா கhலத்தில் இருந்து நாம் வரை பார்த்தாச்சு அதுல அவரு பல கோடி சொத்தும் சேர்த்தாச்சு
அவரு பேரன் என்னனா ஒரு உயரமான இந்தி நடிகர பார்த்தா தாத்தா ஞாபகம் வருதுனு நகைக்கட விளம்பரத்தில் சொல்றாப்பல அவரு மகன் என்னனா அப்பா அப்பானு அப்பா பேர வச்சு இன்னும் கோடி கோடியா சம்பாதிக்கராப்ல.
இதுல பலகோடி ரூபாய் செலவில் ஷாப்பிங்க் காம்ளக்ஸ் கட்டப்போறாங்கனு வேற பேச்சு. ஏன் அவங்க அவங்களோட அப்பாக்கு தாத்தாக்கு மணிமண்டபம் கட்டமாட்டாங்களா?
கோடிகோடியா சம்பாதித்தாலும் வரியே கட்ட மாட்டோம்னு அடம்பிடிக்கிற நடிகர்கள் பணம் ஒதுக்கி கட்டமாட்டாங்களா.
இப்பவும் இந்த ஏமாளிப்பயலுக நாங்கதான் கிடைத்தோமா?
இப்படி ஒவ்வொருகாலகட்ட நடிகர்களுக்கும் மணிமண்டபம் சிலைனு கட்டின தமிழ்நாடு முழுவதும் ஒரே நடிகர்களின் சிலையும் மணிமண்டபமும் தான் இருக்கும்.
முதலில் அரசு பணத்தில் மணிமண்டபம் கட்டுவது சிலை வைப்பதற்கு தடை விதிக்கனும்.
Saturday, June 20, 2015
எச்சில்
என் எச்சில்
ஐஸ்கிரீம்
அத்தனை சுவையென்றாய்
ஆம்
சற்று முன்தான்
உன் பேர்
உச்சரித்தேன்
Tuesday, June 2, 2015
மாறிய மாரி
மும்மாரி
வந்து
முப்போகம்
தந்தாய்
முப்பருவம்
முறைமாறி
பொழிந்து
பொய்த்ததேனோ
Subscribe to:
Posts (Atom)